ADDED : ஜூலை 26, 2011 12:48 AM
மதுரை : மதுரை லேடிடோக் கல்லூரியில் ஐ.சி.டி., அகாடமி ஆப் தமிழ்நாடு சார்பில் திறன் வளர்ப்பு பயிற்சி குறித்த துவக்கவிழா மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதற்கான விழாவில் கல்லூரி பொருளாளர் பியூலா வரவேற்றார். முதல்வர் மெர்ஸி புஷ்பலதா பேசியதாவது: மாணவிகளின் வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்தும் வகையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம். 80 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தால் கூட, வேலைதரும் நிறுவனங்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு பட்டதாரிகள் இருப்பதில்லை. வெறும் இரண்டு சதவீதம் பேர் மட்டுமே சிறந்த நிறுவனங்களில் வேலை செய்வதற்குரிய தகுதியை பெற்றுள்ளனர்.
திறன் பயிற்சி முகாமில் சிக்கலான கேள்விகளை புரிந்து கொண்டு, அதற்கு விடையளித்தல், கட்டுரை எழுதுதுல், தமிழ், ஆங்கில மொழிகளில் தொடர்பாற்றல் வளர்த்தல், நடத்தை செயல்களை ஒழுங்குபடுத்துதல் ஆகியவை பாடத்திட்டமாக நடத்தப்படுகிறது. பயிற்சி நிறைவில் தரப்படும் சான்றிதழ், கூடுதல் வேலைவாய்ப்பை ஏற்படுத்தும், என்றார். ஐசிடி துணைப்பொதுமேலாளர் சுப்ரமணியன், மண்டல மேலாளர் ராகவ் சீனிவாசன், தொடர்பு மேலாளர் ஜெயச்சந்திரன் பங்கேற்றனர். பேராசிரியை ஜெயச்சந்திரா நன்றி கூறினார்.