/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் பயோடெக்னாலஜி கருத்தரங்கம்தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் பயோடெக்னாலஜி கருத்தரங்கம்
தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் பயோடெக்னாலஜி கருத்தரங்கம்
தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் பயோடெக்னாலஜி கருத்தரங்கம்
தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் பயோடெக்னாலஜி கருத்தரங்கம்
ADDED : அக் 06, 2011 03:37 AM
பெரம்பலூர்: தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
உயிர் தொழில்நுட்பவியல் மற்றும் உயிர் தகவலியல் துறை சார்பாக தேசிய அளவிலான
கருத்தரங்கம் ஹரிசான் இன் பயோடெக்னாலஜி என்ற தலைப்பில் நடந்தது.
கருத்தரங்கத்துக்கு தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர்
சீனிவாசன் தலைமை வகித்தார். கல்வி நிறுவன செயலாளர் நீல்ராஜ், துணை தலைவர்
அனந்தலஷ்மி கதிரவன், இயக்குனர்கள் பூபதி, மணி, நிதி அலுவலர் ராஜசேகர்
முன்னிலை வகித்தனர்.
கருத்தரங்கில், கல்லூரி ஆலோசகர் ராம மீனாட்சி, கல்லூரி முதல்வர் பாகீரதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கருத்தரங்கில் முனைவர் திருநலசுந்தரி பேசியதாவது: கடந்த சில ஆண்டாக உயிர்
தொழில்நுட்பவியலின் தேவை அதிகரித்து வருகிறது. உலகளவில் இதன் தேவை ஒவ்வொரு
நாளும் மேம்பட்டு வருகிறது. அதிகரித்து வரும் மக்கள் தொகையால் சுத்தமான
குடிநீர், மாசற்ற காற்று, விளை பொருட்கள் மற்றும் ஆரோக்கியத்தை
மேம்படுத்தக்கூடிய பொருட்களின் அளவானது குறைந்து கொண்டே போகிறது.
இதை ஈடுகட்டும் வகையில் உயிர் தொழில்நுட்பவியலின் வளர்ச்சி பல்வேறு
பரிமாணங்களில் அதாவது நொதித்தல் தொழில்நுட்பவியல், நுண்ணுயிரி
தொழில்நுட்பவியல், நோய் எதிர்ப்பு தொழில்நுட்பவியல் போன்றவை வளர்ந்து
வருகிறது என்று கூறினார்.
முனைவர் பிரகாஷ் பிரபு பேசியதாவது: ஒளியின் உதவியை கொண்டு புரதத்தின்
தன்மையை மேம்படுத்த முடியும் என்பதையும், ஒளிக்கற்றையின் உதவியில்
புரதத்தில் ஏற்படும் மாற்றத்தை அறிய முடியும் என்றார்.
முனைவர் சுகுமாறன் பேசியதாவது: உயிர் தொழில்நுட்பவியலின் உதவியின் மூலம்
வாகனங்கலிருந்து வெளியேற்றப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவின் அளவினை
நுண்ணுயிரின் உதவியால் குறைக்க இயலும். இதைத்தொடர்ந்து மாணவிகள் தங்களது
ஆய்வுகளை சமர்ப்பித்தனர். துறை தலைவர் சீதாலெட்சுமி வரவேற்றார்.
விரிவுரையாளர் மதுரா நன்றி கூறினார்.


