/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/பெரம்பலூர் உள்ளாட்சி தேர்தல் களம்: 3,751 வேட்பாளர் போட்டிபெரம்பலூர் உள்ளாட்சி தேர்தல் களம்: 3,751 வேட்பாளர் போட்டி
பெரம்பலூர் உள்ளாட்சி தேர்தல் களம்: 3,751 வேட்பாளர் போட்டி
பெரம்பலூர் உள்ளாட்சி தேர்தல் களம்: 3,751 வேட்பாளர் போட்டி
பெரம்பலூர் உள்ளாட்சி தேர்தல் களம்: 3,751 வேட்பாளர் போட்டி
ADDED : அக் 06, 2011 03:35 AM
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் 1,323 பதவியிடங்களில் போட்டியிட 4,962 பேர் வேட்பு மனு செய்திருந்தனர். மனு தள்ளுபடி, வாபஸ், போட்டியின்றி தேர்வு என, இறுதியாக தற்போது மாவட்டம் முழுவதும் 3,751 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளாக நகராட்சி தலைவர் பதவி, 4 டவுன் பஞ்சாயத்து தலைவர்களும், எட்டு மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள், 21 நகராட்சி கவுன்சிலர்கள், 76 யூனியன் கவுன்சிலர்கள், 60 டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர்கள், 121 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி, 1,032 கிராம பஞ்சாயத்து கவுன்சிலர்கள் பதவி என மொத்தம் 1,323 பதவியிடங்கள் உள்ளது.
இப்பதவிகளுக்கு வேட்பு மனுதாக்கல் கடந்த 22ம் தேதி துவங்கி, 29ம் தேதி வரை நடந்தது. இதில், தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 4,962 பேர் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர்.
கடந்த 30ம் தேதி நடந்த வேட்புமனு பரிசீலனையில் தகுதியற்றதாக 86 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
பின் மூன்றாம் தேதி நடந்த வேட்புமனு வாபஸ் போது பல்வேறு பதவியிடங்களுக்கு போட்டியிட வேட்புமனு செய்த 928 பேர், தங்களது வேட்பு மனுவினை வாபஸ் பெற்றனர். 197 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இறுதியாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கு 3,751 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.


