பொது பாதைக்கு இடையூறுமாஜி நிறுவனம் சார்பில் மனு:ஐகோர்ட் கிளை உத்தரவு
பொது பாதைக்கு இடையூறுமாஜி நிறுவனம் சார்பில் மனு:ஐகோர்ட் கிளை உத்தரவு
பொது பாதைக்கு இடையூறுமாஜி நிறுவனம் சார்பில் மனு:ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை:தி.மு.க., முன்னாள் மத்தியமைச்சர் டி.ஆர்.பாலுவுக்கு சொந்தமான தஞ்சை வடசேரி கிங்ஸ் இந்தியா கெமிக்கல் நிறுவனத்திற்கான பொது பாதை பயன்பாட்டில் இருந்தால் இடையூறு செய்ய கூடாது, என மதுரை ஐகோர்ட் கிளை
நிறுவனத்திற்கு வருவோர் மட்டுமின்றி, விவசாயிகள் இந்த பாதையை பயன்படுத்தினர். இந்நிலையில் செப்., 16ம் தேதி சிலர் இந்த பாதையை ஆக்கிரமித்து யாரும் பயன்படுத்த முடியாதளவுக்கு கற்களை நட்டனர். இதுகுறித்து விசாரித்த போது, ஒரத்தநாடு தாசில்தார் உத்தரவின்படி நடவடிக்கைகளை எடுப்பதாக தெரிவித்தனர். பொது பாதையை அடைக்க கூடாது என உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது.மனுவை விசாரித்த நீதிபதி பி.ஜோதிமணி பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கை தகுதி அடிப்படையில் பார்க்காமல், சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு பார்க்க வேண்டியுள்ளது. பொது பாதையாக மக்கள் பயன்படுத்தி வந்திருந்தால், அதிகாரிகள் இடையூறு செய்யக்கூடாது. அப்படியில்லாத பட்சத்தில் சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.