/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/கோவில்பட்டியில் மாநில அளவிலான வாலிபால் போட்டிகோவில்பட்டியில் மாநில அளவிலான வாலிபால் போட்டி
கோவில்பட்டியில் மாநில அளவிலான வாலிபால் போட்டி
கோவில்பட்டியில் மாநில அளவிலான வாலிபால் போட்டி
கோவில்பட்டியில் மாநில அளவிலான வாலிபால் போட்டி
ADDED : ஜூலை 24, 2011 01:20 AM
கோவில்பட்டி : கோவில்பட்டியில் நடந்த மாநில அளவிலான வாலிபால் போட்டியில் கோவில்பட்டி அணி உட்பட நான்கு அணிகள் வெற்றி பெற்றது.கோவில்பட்டி இந்தியன் ஸ்டார் கைப்பந்து கழகத்தின் வெள்ளிவிழா ஆண்டு மற்றும் 13வது மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மின்னொளி வாலிபால் போட்டி துவங்கியது.
போட்டியின் துவக்க விழாவிற்கு கோவில்பட்டி சேர்மன் மல்லிகா தலைமை வகித்தார். கவுன்சிலர் ஜோதிபாசு முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் ஜெயகிருஷ்ணன் போட்டிகள் குறித்து பேசினார். தொழிலதிபர் தாமோதரன் போட்டிகளை துவக்கி வைத்து பேசினார். முதல் போட்டியில் மதுரை மதுரா அணியும், ராஜபாளையம் சிட்டிகிளப் அணியும் மோதியதில் மதுரா கல்லூரி அணி வெற்றி பெற்றது. இதையடுத்து இரண்டாவது ஆட்டத்தில் மதுரை சரஸ்வதிபாண்டியன் மெமோரியல் அணியும், ராஜபாளையம் தமிழ்நாடு ஸ்பெஷல் போலீஸ் அணியும் மோதியதில்ல் மதுரை சரஸ்வதிபாண்டியன் மெமோரியல் அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து நடந்த மூன்றாவது ஆட்டத்தில் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி அணியும், கோவில்பட்டி சாரா தங்கமாளிகை அணியும் மோதியதில் 25-8, 25-18 என்ற புள்ளிக்கணக்கில் கோவில்பட்டி சாரா தங்கமாளிகை அணி வெற்றி பெற்றது. இறுதியாக நடந்த நான்காவது போட்டியில் நெல்லை சாரா ஸ்போர்ட்ஸ் அகடமி அணியும், தருவைகுளம் சென்மைக்ஸ் அணியும் மோதியதில் 25-24, 25-22 என்ற புள்ளிக்கணக்கில் தருவைக்குளம் சென்மைக்ஸ் அணியினர் வெற்றி பெற்றனர்.


