/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/சாலை ஆய்வாளர்கள் சங்க செயற்குழு கூட்டம்சாலை ஆய்வாளர்கள் சங்க செயற்குழு கூட்டம்
சாலை ஆய்வாளர்கள் சங்க செயற்குழு கூட்டம்
சாலை ஆய்வாளர்கள் சங்க செயற்குழு கூட்டம்
சாலை ஆய்வாளர்கள் சங்க செயற்குழு கூட்டம்
ADDED : செப் 11, 2011 01:01 AM
கோவில்பட்டி : கோவில்பட்டியில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை ஆய்வாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.
கோவில்பட்டி பயணியர் விடுதியில் நடந்த தமிழ்நாடு நெடுஞ்சாலைதுறை சாலை ஆய்வாளர்கள் சங்க செயற்குழு கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஸ்டாலின் தலைமை வகித்தார். செயலாளர் சிவசண்முகநாதன் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் ஆத்தியப்பன் பேசினார். பின்னர் சைக்கிள் படி பிற கோட்டங்களில் வழங்கப்படுவது போல் மற்ற எல்லா கோட்டங்களிலும் ரூபாய் 100 ஆக உயர்த்தி வழங்கப்பட வேண்டும். அமைச்சு பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு தர ஊதியம் சாலை ஆய்வாளர்களுக்கும் வழங்க வேண்டும் உட்பட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பொருளாளர் வடிவுராஜ் நன்றி கூறினார். சுதந்திர போராட்ட வீரர்கள் பாரதியார் பெயரில் எட்டயபுரத்தில் கலை கல்லூரி அமைக்கவும், வீரபாண்டிய கட்டபொம்மன் பெயரில் கயத்தாறில் பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க வலியுறுத்தி வட்ட துணை தலைவர் ஹரிபாலகிருஷ்ணன், இணை செயலாளர்கள் பாஸ்கரன் மற்றும் சுப்பையா ஆகியோர் பேசினர். இணை செயலாளர் கபில்ராஜ் நன்றி கூறினார்.