/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/மினிலாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்புமினிலாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு
மினிலாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு
மினிலாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு
மினிலாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஆக 14, 2011 10:21 PM
ஒட்டன்சத்திரம் : அத்திக்கோம்பை ரயில்வே கேட் பகுதியில் மினிலாரி கவிழ்ந்ததால் ஒட்டன்சத்திரம்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஒட்டன்சத்திரம் -அத்திக்கோம்பை இடையே ரயில்வே கேட் அமைந்துள்ளது. அகலப்பாதை பணிகள் காரணமாக, ரோடு பகுதியில் புதிதாக தண்டவாளங்கள் பொருத்தப்பட்டன. தண்டவாளத்தின் இரண்டு பக்கங்களிலும் புதிதாக ரோடு போடப்பட்டுள்ளது. ஆனால் மையப்பகுதி மட்டும் பள்ளமாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் உயராமான ரோடு பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் தண்டவாளம் அமைந்துள்ள பகுதியை கடக்கும் போது விபத்திற்குள்ளாகின்றன. நேற்று முன்தினம் இரவு அதிவேகமாக சென்ற மினிலாரி இப்பகுதியில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதனால் திண்டுக்கல்- ஒட்டன்சத்திரம் ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தண்டவாளம் பொருத்தப்பட்டுள்ள பகுதியில் ரோட்டை சீரமைத்தால் தான் தொடர் விபத்துக்கள் தவிர்க்கப்படும்.