Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/"2 மின்னணு இயந்திரங்களை கண்காணிக்க வேண்டும்'

"2 மின்னணு இயந்திரங்களை கண்காணிக்க வேண்டும்'

"2 மின்னணு இயந்திரங்களை கண்காணிக்க வேண்டும்'

"2 மின்னணு இயந்திரங்களை கண்காணிக்க வேண்டும்'

ADDED : அக் 15, 2011 02:06 AM


Google News
மேட்டுப்பாளையம் : ''வாக்காளர்கள் நகர்மன்ற தலைவர், வார்டு கவுன்சிலருக்கு சரியான மின்னணு இயந்திரத்தில் ஓட்டு போடுகின்றனரா என்று, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்,'' என, தேர்தல் அலுவலர் பேசினார்.

மேட்டுப்பாளையம் நகராட்சியில் வரும் 17ம் தேதி தேர்தல் நடக்கிறது. ஓட்டுச்சாவடியில் பணியாற்றும் அலுவலர்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி முகாம் சி.எஸ்.ஐ., சர்ச் மண்டபத்தில் நடந்தது. தலைமை தாங்கி, தேர்தல் நடத்தும் அலுவலர் இளங்கோவன் பேசுகையில்,''மின்னணு இயந்திரம் கையாளும் ஓட்டுப்பதிவு அலுவலர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் இரண்டு இயந்திரங்கள் வைக்கப்படும். உள்ளே வரும் வாக்காளர் தலைவர், கவுன்சிலருக்கு, சரியான மின்னணு இயந்திரத்தில் ஓட்டு போடுகின்றனரா என்று, அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.தேர்தல் நல்ல முறையிலும், அமைதியாகவும் நடத்த அலுவலர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்,'' என்றார்.உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் டாக்டர் பிரதீப் கிருஷ்ணகுமார், சவுந்திரம், சண்முகவடிவு, தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் முத்துரத்தினம் மின்னணு இயந்திரம் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். முகாமில், 250க்கும் மேற்பட்ட பள்ளி ஆசிரியர், அரசு அலுவலர் ஆகியோர் பங்கேற்றனர். தேர்தல் <உதவியாளர் ஜெயராமன் வரவேற்றார். பாலச்சந்திரன் நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us