Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/சுகாதாரத்திற்கு முன்னுரிமை : அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி

சுகாதாரத்திற்கு முன்னுரிமை : அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி

சுகாதாரத்திற்கு முன்னுரிமை : அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி

சுகாதாரத்திற்கு முன்னுரிமை : அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி

ADDED : அக் 13, 2011 10:13 PM


Google News

சத்திரப்பட்டி : ''சத்திரப்பட்டி, தா.புதுக்கோட்டை பகுதிகளில் சுகாதாரத்திற்கு முன்னுரிமை தரும் வகையில் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டு, அடிப்படை தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்,'' என, ஒட்டன்சத்திரம் ஒன்றிய கவுன்சில் 15 வது வார்டு அ.தி.மு.க., வேட்பாளர் க.குணசேகரன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: கடந்த ஐந்து ஆண்டுகளில், சத்திரப்பட்டி பகுதிகளில் நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. சத்திரப்பட்டி, தா.புதுக்கோட்டை பகுதிகளில் சுகாதாரத்துக்கு முன்னுரிமை வழங்கி அனைத்து ஊர்களிலும் கழிப்பறைகள் கட்டித்தரப்படும். தெருவிளக்கு மற்றும் குடிநீர் வசதி செய்யப்படும். அரசின் இலவச திட்டங்களான கிரைண்டர், மிக்சி, மின் விசிறி, கறவை மாடு, ஆடு, மாணவர்களுக்கு லேப்டாப் ஆகியவை அனைத்து குடும்பங்களுக்கும் பாரபட்சமின்றி பெற்றுத்தரப்படும். முதியோர், திருமண உதவித்தொகை, ஊனமுற்றோர் உதவித்தொகைகள் பெற்றுத்தரப்படும். மேற்குமலை தொடர்ச்சியை ஒட்டி அமைந்துள்ள கிராம பகுதிக்கு யானைகள் வராமல் மின்வேலி மற்றும் அகழிகள் அமைக்கப்படும். சத்திரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வனவிலங்குகள் வராமல் இருக்க சுற்றுச்சுவர் கட்டப்படும். மழைநீர் ஊருக்குள் புகாமல் வடிகால் வசதி செய்துதரப்படும். அனைத்து பகுதிகளிலும் ரோடுகள் அமைக்கப்படும். கிராமப்புறங்களில் உள்ள அனைத்து தெருக்களிலும் சிமென்ட் ரோடுகள் அமைக்கப்படும். இளைஞர் பயன்பெறும் வகையில் நூலகம், விளையாட்டு மைதானம் அமைக்கப்படும். சத்திரப்பட்டியில் 24 மணிநேரமும் செயல்படும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும், என்றார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us