/உள்ளூர் செய்திகள்/தேனி/தென்கரை பேரூராட்சிமுதன்மை பேரூராட்சி : தி.மு.க., வேட்பாளர் சோ.காமராஜ் வாக்குறுதிதென்கரை பேரூராட்சிமுதன்மை பேரூராட்சி : தி.மு.க., வேட்பாளர் சோ.காமராஜ் வாக்குறுதி
தென்கரை பேரூராட்சிமுதன்மை பேரூராட்சி : தி.மு.க., வேட்பாளர் சோ.காமராஜ் வாக்குறுதி
தென்கரை பேரூராட்சிமுதன்மை பேரூராட்சி : தி.மு.க., வேட்பாளர் சோ.காமராஜ் வாக்குறுதி
தென்கரை பேரூராட்சிமுதன்மை பேரூராட்சி : தி.மு.க., வேட்பாளர் சோ.காமராஜ் வாக்குறுதி
ADDED : அக் 13, 2011 09:57 PM
பெரியகுளம் : தேனி மாவட்டத்தில் தென்கரை பேரூராட்சி முதன்மை பேரூராட்சியாக வருவதற்கு பாடுபடுவேன் என தி.மு.க., வேட்பாளர் காமராஜ் தெரிவித்தார்.
தென்கரை பேரூராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க., சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் சோ.காமராஜ், பொதுக்குழு உறுப்பினராக இருக்கிறார். கடந்த முறை இவரது மனைவி முருகாயி பேரூராட்சி தலைவராக இருந்தார். மக்கள் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்து, தேனி மாவட்டத்தில் சிறந்த பேரூராட்சி தலைவர் என பெயர் பெற்றார். வேட்பளார் காமராஜ் கட்சி பணிகளை ஈடுபாட்டுடன் செய்வதால், முன்னாள் முதல்வர் கருணாநிதி இவரை வேட்பாளராக அறிவித்துள்ளார். மாவட்ட செயலாளர் மூக்கையா, ஒன்றிய செயலாளர் போஸ், பேரூர் செயலாளர் செல்வக்குமாரன் மற்றும் கவுன்சிலர் வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகள், அனைத்து சமுதாய பெரியவர்கள் மற்றும் பெண்களுடன் ஓட்டுகள் கேட்டு வருகிறார். காமராஜ் கூறுகையில், கடந்த 5 ஆண்டுகளில் மக்களின் அடிப்படை வசதிகளான சாக்கடைவசதி, சிமென்ட்ரோடு, தார்சாலை, சமுதாயக்கூடம், கூட்ட அரங்கம், சுடுகாடுவசதி, தண்ணீர் வசதி, தெருவிளக்கு வசதி உட்பட 15 வார்டுகளில் 4 கோடி ரூபாய் திட்டமதிப்பீட்டு வேலைகள் செய்து மக்களிடம் பாராட்டுபெற்றோம். திட்டம்: வைகைஅணை கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து தென்கரை பேரூராட்சிக்கு தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்து, தினமும் சீரான குடிநீர் வசதி செய்யப்படும். குடிநீர் மேல்நிலைத்தொட்டி கூடுதலாக கட்டி தரப்படும். தரமான ரேஷன் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'என்றார்.


