/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மக்கள் நல பணியாளர்கள்பணியில் இருந்து விடுவிப்புமக்கள் நல பணியாளர்கள்பணியில் இருந்து விடுவிப்பு
மக்கள் நல பணியாளர்கள்பணியில் இருந்து விடுவிப்பு
மக்கள் நல பணியாளர்கள்பணியில் இருந்து விடுவிப்பு
மக்கள் நல பணியாளர்கள்பணியில் இருந்து விடுவிப்பு
ADDED : செப் 28, 2011 12:49 AM
சென்னிமலை: மக்கள் நலப்பணியாளர்கள் அனைவரும், தேர்தல் முடியும் வரை,
பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.கிராம பஞ்சாயத்து பகுதிகளில்,
பஞ்சாயத்துக்கு ஒரு மக்கள் நலப்பணியாளர்கள் தி.மு.க., ஆட்சியால்
பணியமர்த்தப்பட்டனர். அ.தி.மு.க., ஆட்சி வந்தால் இவர்கள் வேலை நீக்கம்
செய்யப்படுவதும், மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைந்ததும் பணி வழங்குவதும் 20
ஆண்டுகளாக கண்ணாமூச்சி விளையாட்டாக தொடர்கிறது.தற்போது அவர்களுக்கு நல்ல
சம்பளம் தரப்பட்டு, கிராமபஞ்சாயத்துகளில் நடக்கும் தேசிய வேலை உறுதி திட்ட
பணிகளை முழுமையாக கவனித்து வந்தனர். அ.தி.மு.க., பொறுப்பேற்ற பிறகும்,
நான்கு மாதங்களாக இந்த பணிகளை கவனித்து வந்தனர்.நேற்று திடீரென,
'என்.ஆர்.சி.எஸ்., பணிகளில் இருந்து மக்கள் நலப்பணியாளர்களை விடுவிக்க
வேண்டும். அவர்களுக்கு தேர்தல் முடியும் வரை, எந்த பணியும் வழங்க கூடாது'
என, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது.
இதை
தொடர்ந்து மக்கள் நலப்பணியாளர்களிடம் இருந்து, அவர்கள் பொறுப்பில் இருந்த
ரிக்காடு நோட்டுகள், வட்டார வளர்ச்சி அலுவலரால் பறிக்கப்பட்டுள்ளன. திடீரென
வேலை பறிக்கப்பட்டதால் மக்கள் நலப்பணியாளர்கள் திகைத்து
நிற்கின்றனர்.உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க.,வுக்கு ஆதரவாக இவர்கள்
பணியாற்றி விடுவர் என்ற அச்சத்தில், தேர்தல் முடியும் வரை பணி விடுவிப்பு
செய்திருக்கலாம் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மாவட்டம் முழுவதும்
நேற்று என்.ஆர்.ஜி.எஸ்., பணிகள் நடக்கவில்லை. சென்னிமலை யூனியன் ஒட்டபாறை
தலைவர் திருமூர்த்தி, காங்கேயம் எம்.எல்.ஏ., நடராஜிடம் இத்தகவலை
தெரிவித்துள்ளார்.யூனியன் அலுவலகத்துக்கு வந்த எம்.எல்.ஏ., நடராஜ், 'எனக்கு
தெரியாமல் வேலை உறுதி திட்டப் பணியை எப்படி நிறுத்தலாம்?' என பி.டி.ஓ.,வை
'டோஸ்' விட்டார்.''அய்யா! இது அரசு உத்தரவு,'' என பி.டி.ஓ., விளக்கம் தந்த
பிறகே எம்.எல்.ஏ., சமாதானமானார்.