ADDED : செப் 04, 2011 11:07 PM
பண்ருட்டி : பண்ருட்டி மனவளக்கலை அறக்கட்டளை சார்பில் மனைவி நல வேட்பு விழா நடந்தது.
உலக சமுதாய சேவா சங்க மண்டலத் தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். மனவளக்கலை பொருளாளர் விஜயரங்கன் முன்னிலை வகித்தார். பழனிவேல் தம்பதியினர் வரவேற்றனர். தஞ்சாவூர் உலக சமுதாய சேவா சங்க காஞ்சிநாதன் தம்பதியினர், நெய்வேலி ராமலிங்கம் தம்பதியினர், பண்ருட்டி இன்ஸ்பெக்டர் சிதம்பரமுருகேசன், வழக்கறிஞர் குணாளன், தொழிலதிபர் சேகர் ஆகியோர் பேசினர். வைத்தியநாதன் நன்றி கூறினார்.