ஓட்டெடுப்பு கிடையாது; விவாதம் மட்டுமே : அரசு அறிவிப்பு : ஓட்டெடுப்பு வேண்டும்
ஓட்டெடுப்பு கிடையாது; விவாதம் மட்டுமே : அரசு அறிவிப்பு : ஓட்டெடுப்பு வேண்டும்
ஓட்டெடுப்பு கிடையாது; விவாதம் மட்டுமே : அரசு அறிவிப்பு : ஓட்டெடுப்பு வேண்டும்
UPDATED : ஆக 27, 2011 08:58 AM
ADDED : ஆக 26, 2011 01:12 AM

புதுடில்லி: ஜன் லோக்பால் மசோதா விவகாரத்தில், நாளை பார்லிமென்டில் விவாதம் மட்டுமே நடத்தப்படும் என்றும், ஓட்டெடுப்பு நடத்தப்படாது என்று அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பன்சால் தெரிவித்துள்ளார்.
ஓட்டெடுப்பு கிடையாது : அரசு அறிவிப்பு : புதுடில்லி : ஜன் லோக்பால் மசோதா குறித்து, பார்லிமென்டில் விவாதம் மட்டுமே நடைபெறும் என்றும், ஓட்டெடுப்பு நடத்தப்படாது என்று அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த விவாதத்தை, அமைச்சர் பிரணாப் முகர்ஜி துவக்கி வைப்பார் என்றும், அனைத்து கட்சிகளும் இதில் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்ப்பதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.
ஓட்டெடுப்பு ஏன் : ஜெட்லி விளக்கம் : புதுடில்லி : ஜன் லோக்பால் மசோதா குறித்து ஓட்டெடுப்பு நடத்தப்படுவதன் மூலமே, அரசியல் கட்சிகளின் உண்மையான நிலை தெரிய வரும் என்றும்,விவாதத்தின் மூலம் இது சாத்தியமில்லை என்பதாலேயே, பா.ஜ., கட்சி ஓட்டெடுப்பை வலியுறுத்துவதாக கட்சி மூத்த தலைவர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். பார்லிமென்டில், இம்மசோதா குறித்து விவாதம் மட்டுமே நடைபெறும், ஓட்டெடுப்பு நடத்தப்படாது என்று அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விவாதம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் ஒழிய போராட்டத்தை வாபஸ் பெறும் எண்ணம் இல்லை என ஹசாரே குழுவை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியான கிரண்பேடி இன்று உண்ணாவிரத மேடையில் தெரிவித்தார். இதற்கிடையில் பார்லி.,யில் விவாதம் நாளை துவங்கும் என பார்லி., விவகாரத்துறை அமைச்சர் பன்சிலால் தெரிவித்துள்ளார். இதனால் போராட்டத்தை கைவிட வேண்டும் என மத்திய அதமச்சர் பிரணாப் முகர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமருக்கு ஹசாரே அனுப்பியுள்ள கடிதத்தில் லோக்சபாவில் விவாதம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் ஒழிய போராட்டத்தை கைவிட முடியாது என கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரதமர் மன்மோகன்சிங், தனது மூத்த அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து ஹசாரே வலியுறுத்தும் ஜன்லோக்பால் மீது பார்லி.,யில் விவாதம் நடத்த வேண்டும் காங்கிரசார் நோட்டீஸ் வழங்கினர். இதற்கிடையில் பா.ஜ., சார்பில் எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதத்தை நடத்த வேண்டும் என சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆலோசனை : நேற்றிரவு மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஹசாரே உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், மத்திய அரசு தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஹசாரேவுடன் நடத்திய சந்திப்பு குறித்து, விலாஸ்ராவிடம் ஆலோசனை நடத்திய பிரதமர், பிரணாப் முகர்ஜி மற்றும் அந்தோணியுடன் ஆலோசனை நடத்தினார். இந்த சிறப்பு கூட்டத்திற்கு பின், பிரணாப் முகர்ஜி, பார்லிமென்டில் ஜன் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்படுவது குறித்து, மூத்த அமைச்சர்களான சல்மான் குர்ஷித், பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பன்சால், அம்பிகா சோனி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
அரசு உறுதிமொழியை எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும் என, ஹசாரே கேட்டிருந்தார்.
இந்த உறுதிமொழியை தயார் செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. விவாதம் நடத்தப்பட உள்ள ஜன் லோக்பால் மசோதா குறித்த விவரங்கள் அடங்கிய கடிதம் தயாராகிவிட்டது. இக்கடிதம், இந்தி மற்றும் மராத்தி மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இக்கடிதம், பார்லிமென்டின் விவாதம் துவங்குவதற்கு முன், ஹசாரேயிடம் அளிக்கப்படும் எனத் தெரிகிறது. உறுதிமொழி கடிதத்தை ஹசாரே பெற்றுக் கொண்டதும், உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வது பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ஹசாரே குழுவைச் சேர்ந்த பிரசாந்த் பூஷன் கூறுகையில், 'அரசு கோரிக்கைகளை ஏற்பதாகச் சொல்லியிருப்பது வரவேற்கத்தக்கது.
பார்லிமென்டில் மசோதா நிறைவேறுவதில், கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும். இல்லையென்றால் இழுபறி நிலை ஏற்படும். எனவே, மசோதா நிறைவேறும் வரை உண்ணாவிரதம் தொடரும் என்றார். இதே கருத்தை கிரண் பேடியும் தெரிவித்தார்.
அத்வானியுடன் சந்திப்பு: அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த கிரண் பேடி, பிரசாந்த் பூஷன், சாந்தி பூஷன், மனோஜ் செசுடியா ஆகியோர், பாரதிய ஜனதா தலைவர் அத்வானியை நேற்று சந்தித்து பேசினர்.