/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ராமநாதபுரம் மாவட்டத்தில் ரமலான் நோன்பு துவங்கியதுராமநாதபுரம் மாவட்டத்தில் ரமலான் நோன்பு துவங்கியது
ராமநாதபுரம் மாவட்டத்தில் ரமலான் நோன்பு துவங்கியது
ராமநாதபுரம் மாவட்டத்தில் ரமலான் நோன்பு துவங்கியது
ராமநாதபுரம் மாவட்டத்தில் ரமலான் நோன்பு துவங்கியது
ADDED : ஆக 01, 2011 11:50 PM
கீழக்கரை : ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று மாலை ரமலான் மாத பிறை பார்க்கப்பட்டதை தொடர்ந்து இன்று (செவ்வாய்) முதல் ரமலான் நோன்பு துவக்க அரசு மாவட்ட காஜி சலாஹூத்தீன் அறிவிப்பு செய்தார்.இதை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் நேற்று இரவு தராவீஹ் எனப்படும் நோன்பு தொழுகை நடந்தது.
முஸ்லிம் மக்கள் ரமலான் மாதத்தில் 30 நாட்களும் நோன்பு பிடித்து ஷவ்வால் மாதத்தின் முதல் நாள் ரமலான் பண்டிகையை கொண்டாடுகின்றனர். ரமலான் மாதத்தின் முதல் பிறை பார்த்த பின்னர் நோன்பு உறுதி செய்யப்படும்.நேற்று பல ஊர்களில் பிறையை காண பள்ளிவாசல்களிலும்,வீட்டுமாடிகளிலும் ஏறி நின்றனர்.இந்நிலையில் இரவு 7.10க்கு ரமலான் மாத முதல் பிறை தெரிந்தது.மாவட்ட மக்கள் அனைவரும் ரமலான் பிறையை வரவேற்றனர். இதை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து பேஷ் இமாம்(மதகுரு)களுக்கும் மாவட்ட அரசு காஜி சலாஹூத்தீன் தகவல் தெரிவித்தார். கீழக்கரையில் உள்ள 14 பள்ளிவாசல்களிலும் தராவீஹ் தொழுகை நடந்தது.பெண்களுக்கான தொழுகை மதரஸாக்களில் நடந்தது.முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து இரவு நடந்த நோன்புக்கான தராவீஹ் தொழுகையில் கலந்து கொண்டனர்.


