/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனையில் விஷமுறிவு தீவிர சிகிச்சை மையம் திறப்புகே.எம்.சி.ஹெச்., மருத்துவமனையில் விஷமுறிவு தீவிர சிகிச்சை மையம் திறப்பு
கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனையில் விஷமுறிவு தீவிர சிகிச்சை மையம் திறப்பு
கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனையில் விஷமுறிவு தீவிர சிகிச்சை மையம் திறப்பு
கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனையில் விஷமுறிவு தீவிர சிகிச்சை மையம் திறப்பு
ADDED : ஆக 01, 2011 02:23 AM
ஈரோடு: ஈரோடு கே.எம்.சி.ஹெச்., ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நியூரோ ஐ.சி.யூ., மற்றும் விஷ முறிவு தீவிர சிகிச்சை மையம் திறப்பு விழா நேற்று நடந்தது.மருத்துவமனை தலைவர் நல்லா பழனிச்சாமி வரவேற்று பேசுகையில், ''இம்மருத்துவமனையில் எல்லாவித சிகிச்சை வசதிகளையும் ஏற்படுத்த முயற்சி மேற்கொள்கிறோம். தற்போது துவங்கிய நியூரோ ஐ.சி.யூ., மற்றும் விஷ தீவிர சிகிச்சை பிரிவு இப்பகுதியினருக்கு வரப்பிரசாதம்,'' என்றார்.
பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். தலைமை வகித்து தீவிர சிகிச்சை மையத்தை திறந்து வைத்து தமிழக வேளாண்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:ஈரோட்டில் கே.எம்.சி.ஹெச்., சிறப்புடன் பணியாற்றி வருகிறது. பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் கடிக்கும் போது, தற்போது திறக்கப்பட்ட இம்மையம் மூலம் நல்ல சிகிச்சையளிக்க முடியும்.மேலை நாட்டில் படித்து வந்தாலும், நமது மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்ற எண்ணத்துடன் இம்மருத்துவமனை தலைவர் செயல்படுகிறார். இம்மருத்துவமனை மேலும் சிறப்புடன் செயல்பட எங்களது ஒத்துழைப்பை அளிப்போம். மருத்துவமனை தலைவர் நல்லா பழனிச்சாமி, முதல்வர் ஜெயலலிதாவுக்கு 1988ம் ஆண்டு முதலே அறிமுகமாகி நேரடி தொடர்பில் உள்ளவர். இதுபோன்ற மருத்துவமனைகள் சிறப்புடன் பணியாற்ற வேண்டுமென்ற முதல்வரின் எண்ணத்தை நீங்கள் நிறைவேற்ற வேண்டும்.மருத்துவமனையில் கூடுதல் செலவாகியுள்ளோர் எங்களிடம் வந்து உதவி கேட்கும் போது, நானும், பொதுப்பணித்துறை அமைச்சரும் உங்களிடம் கேட்டால், 25 சதவீதம் வரை கட்டணம் குறைத்து வழங்க வேண்டுமென வேண்டுகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.கலெக்டர் காமராஜ், எம்.எல்.ஏ.,க்கள் தோப்பு வெங்கடாசலம், நாராயணன், ரமணீதரன், கிட்டுசாமி சந்திரகுமார், மருத்துவமனை எம்.டி., டாக்டர் மோகன், டாக்டர்கள் சம்பத், ரகுநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.