/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/எய்ட்ஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்எய்ட்ஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்
எய்ட்ஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்
எய்ட்ஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்
எய்ட்ஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்
ADDED : ஆக 01, 2011 01:33 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் எய்ட்ஸ் மற்றும் ஹெச்.ஐ.வி., நோய்
தாக்குதலை கட்டுப்படுத்தும் விதமாக தன்னார்வ அமைப்புகள் மற்றும் மாவட்ட
எஸ்ட்ஸ் தடுப்பு பிரிவின் மூலம் பல்வேறு விதத்திலான விழிப்புணர்வு
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இருந்தும் மாவட்டத்தில் எய் ட்ஸ்
நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. மாவட்டம்
முழுவதும் 2,975 பேர் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவலை
மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பிரிவு நேற்று
வெளியிடப்பட்டது. புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த எய்ட்ஸ் நோய்
தடுப்பு விழிப்புணர்வு முகாமில் இதை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும்
கட்டுப்பாடு பிரிவு மேற்பார்வையாளர் வாருணிதேவி வெளியிட்டார். மேலும்
எய்ட்ஸ் மற்றும் ஹெச்.ஐ.வி., நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் விதமாக
கிராமிய கலை நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு
ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் துவக்கப்பட்டன. மாநில அளவிலான இக்கலை
நிகழ்ச்சியை கலெக்டர் மகேஸ்வரி துவக்கிவைத்தார்.