ADDED : செப் 14, 2011 03:19 AM
கோயம்பேடு:தனியார் தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் பெண்ணிடம், சில்மிஷம்
செய்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.சென்னை புறநகர்பகுதியான
அய்யப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் லாவண்யா, 38.
கோயம்பேடு பகுதியில்
உள்ள தனியார் நிறுவனத்தின் செயலராகவுள்ளார். நேற்று முன்தினம் மாலை,
வீட்டிற்கு செல்வதற்காக, கோயம்பேடு காளியம்மன் கோவில் சாலை வழியே, ஆட்டோ
நிறுத்தத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது, அவ்வழியே வந்த
ஒருவர், லாவண்யாவை தொட்டு சில்மிஷம் செய்துள்ளார்.சுதாரித்துக் கொண்ட
லாவண்யா, அருகில் இருந்த போலீஸ் நிலையத்திற்கு விரைந்து சென்று, விவரத்தை
கூறினார். உடனடியாக, சம்பவ பகுதிக்கு விரைந்த கோயம்பேடு போலீசார், அந்த
வாலிபரை பிடித்தனர்.அவரிடம் விசாரித்ததில் சென்னை தண்டையார்பேட்டை
பகுதியைச் சேர்ந்த டிரைவர் சவுந்தரராஜன், 40, என்பது தெரிந்தது. இது
குறித்து, வழக்கு பதிந்த கோயம்பேடு போலீசார், அவரை கைது செய்தனர்.