/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/குறைதீர்வு கூட்டத்தில் 19 பேருக்கு ரூ.4 லட்சம் நலத்திட்ட உதவிகுறைதீர்வு கூட்டத்தில் 19 பேருக்கு ரூ.4 லட்சம் நலத்திட்ட உதவி
குறைதீர்வு கூட்டத்தில் 19 பேருக்கு ரூ.4 லட்சம் நலத்திட்ட உதவி
குறைதீர்வு கூட்டத்தில் 19 பேருக்கு ரூ.4 லட்சம் நலத்திட்ட உதவி
குறைதீர்வு கூட்டத்தில் 19 பேருக்கு ரூ.4 லட்சம் நலத்திட்ட உதவி
திருவள்ளூர் : மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், 19 பேருக்கு, 4 லட்சத்து 5 ஆயிரத்து 600 ரூபாய்க்கான, அரசு நலத்திட்ட உதவிகளை திருவள்ளூர் கலெக்டர் ஆஷிஷ் சட்டர்ஜி வழங்கினார்.
மாற்றுத் திறனாளிகள்: மாற்றுத் திறனாளிகளுக்கு, அதி நவீன செயற்கை அவயம் ஒவ்வொன்றுக்கும், 25 ஆயிரம் ரூபாய் வீதம், மூன்று பயனாளிகளுக்கும், 1,200 ரூபாய் மதிப்பில் செயற்கை அவயம் ஒரு பயனாளிக்கும், பிரெய்லி கை கடிகாரம், கறுப்பு கண்ணாடிகள், மடக்கு ஊன்று கோல்கள் என, 700 ரூபாய் மதிப்பில் 4 பேருக்கும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் துறை சார்பில் சிறந்த பள்ளியில் பிளஸ் 2 பயிலும் மாணவிக்கு கல்வி உதவித்தொகை, 28 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையும், ஆதரவற்ற பெண்கள் திருமண திட்டத்தின் கீழ், ஒருவருக்கு 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையும், அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.விசாகன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜோசப் ரவி, மாவட்ட சமூக நல அலுவலர் ரூத் வெண்ணிலா பங்கேற்றனர்.