ADDED : ஆக 01, 2011 04:13 AM
சேலம் : மின்தொடர்பான குறைகளை தெரிவிப்பதற்கு, ஆகஸ்ட் மாதத்தில் ஆறு
நாட்கள் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.சேலம் மின்வாரிய
செயற்பொறியாளர் அலுவலகத்தில், வரும் 3ம் தேதி சேலம் நகரம் தொடர்பான
குறைதீர் கூட்டம் நடக்கிறது.
ஆகஸ்ட்11ம் தேதி சேலம் கிழக்கு பகுதிக்கான
குறைதீர் கூட்டமும், 17ம் தேதி சேலம் மேற்கு பகுதிக்கான குறைதீர்
கூட்டமும், வரும் 20ம் தேதி வாழப்பாடி பகுதிக்கான குறைதீர் கூட்டமும், 24ம்
தேதி சேலம் தெற்கு பகுதிக்கான குறைதீர் கூட்டமும், 27ம் தேதி ஆத்தூர்
பகுதிக்கான குறைதீர் கூட்டம் என ஆறு நாட்கள் சேலம் செயற்பொறியாளர்
அலுவலகத்தில் நடக்கிறது.இத்தகவலை, சேலம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை
பொறியாளர் சுந்தரேசன் தெரிவித்துள்ளார்.