புதிய தேர்வு முறைகல்வியாளர்கள் வரவேற்பு
புதிய தேர்வு முறைகல்வியாளர்கள் வரவேற்பு
புதிய தேர்வு முறைகல்வியாளர்கள் வரவேற்பு
UPDATED : செப் 28, 2011 12:06 AM
ADDED : செப் 27, 2011 11:44 PM
சென்னை :''தேர்வு முறையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள மாற்றம், மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும்.
சி.பி.எஸ்.இ., திட்டத்தை பின்பற்றி தமிழக அரசு அறிவித்துள்ள தேர்வு மதிப்பீடு முறை வரவேற்கத்தக்கது,'' என, கல்வியாளர் சதீஷ் கூறினார்.ஆர்.எம்.கே., கல்வி குழுமத்தின் முதன்மை முதல்வரும், கல்வியாளருமான சதீஷ் கூறியதாவது:தமிழக அரசு பள்ளி தேர்வு மதிப்பீட்டு முறையில் மிகப் பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளது. இத்திட்டம் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும். தொடர் மதிப்பீட்டு முறை என்பது வரவேற்கத்தக்கது. ஒரேயொரு தேர்வு முடிவை வைத்து, மாணவர்களின் தேர்ச்சி குறித்து முடிவெடுப்பது முறையல்ல.மாணவர்களின் தேர்ச்சிக்கு காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு என, மூன்று தேர்வுகளின் முடிவுகளை கருத்தில் கொள்வது சரியானது. மதிப்பெண்களை மட்டும் வைத்து ஒரு மாணவனின் கல்வித்திறனை மதிப்பிட முடியாது.சி.பி.எஸ்.இ., முறையை பின்பற்றி, 'கிரேடு' முறையை தமிழக அரசு அறிவித்துள்ளது மகிழ்ச்சிக்குரியது. இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த, பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது அவசியம்.இவ்வாறு சதீஷ் கூறினார்.