Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பிரப் ரோட்டில் பல இடத்தில் தடுப்பு சுவர் மாயம்

பிரப் ரோட்டில் பல இடத்தில் தடுப்பு சுவர் மாயம்

பிரப் ரோட்டில் பல இடத்தில் தடுப்பு சுவர் மாயம்

பிரப் ரோட்டில் பல இடத்தில் தடுப்பு சுவர் மாயம்

ADDED : ஆக 19, 2011 02:56 AM


Google News
ஈரோடு: ஈரோடு பிரப் ரோட்டில் பல இடங்களில் தடுப்பு சுவர் இல்லாததால், போக்குவரத்து நெருக்கடியுடன், விபத்து அபாயமும் அதிகரித்துள்ளது.

ஈரோடு மாநகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து குளறுபடி அதிகரிப்பதால், நெருக்கடியும், விபத்துகளும் அதிகரிக்கிறது. பொதுவாக பெரிய ரோட்டுக்கு நடுவே தடுப்பு சுவர் அமைக்கப்பட்டிருக்கும். தடுப்பு சுவரில் சில இடத்தில் மட்டும் வாகனங்கள் சாலையை கடக்க இடைவெளி விடப்பட்டிருக்கும். இதன் மூலம் சாலையில் நினைத்த இடத்தில் வாகனங்கள் நுழைந்து, போக்குவரத்து நெருக்கடி மற்றும் விபத்து அபாயம் ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது. ஈரோடு மாநகரில் உள்ள பல சாலைகளில் தடுப்பு சுவர் முழுமையாக அமைக்கப்படவில்லை. அமைந்திருந்தாலும் அவை பெயர்த்து எடுக்கப்பட்டு, சாலையை எங்கு வேண்டுமானாலும் கடப்பது போல உள்ளதால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன், விபத்து அபாயமும் அதிகரிக்கிறது. பி.எஸ். பார்க் முதல் சவீதா வரையான பிரப் ரோட்டில், மாநகராட்சி அலுவலகம் முன்பிருந்து ஆர்.டி.ஓ., அலுவலகம் வரை தடுப்பு சுவரே இல்லை. இதற்கு முன் அமைக்கப்பட்டிருந்த சிறிய கான்கிரீட் தடுப்புகளும் பெயர்ந்து கிடக்கிறது. இதன் காரணமாக நினைத்த இடத்தில் டூ வீலர், நான்கு சக்கர வாகனங்கள் சாலையை கடக்கின்றன. பிரப் ரோட்டில் இன்னும் சில இடங்களில் தடுப்பு சுவருக்கு பதில், பேரி கார்டு கம்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே, பிரப் ரோடு உள்பட மாநகரின் முக்கிய சாலைகளில் முழுமையாக கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேறு திட்டப் பணிகளுக்காக தடுப்பு சுவர் அமைக்க தாமதமானால், தற்காலிகமாக முழுமையான அளவில் பேரி கார்டு கம்பி வைக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us