Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/காஸ் ஏஜன்சி கேட்டு கையெழுத்து இயக்கம்

காஸ் ஏஜன்சி கேட்டு கையெழுத்து இயக்கம்

காஸ் ஏஜன்சி கேட்டு கையெழுத்து இயக்கம்

காஸ் ஏஜன்சி கேட்டு கையெழுத்து இயக்கம்

ADDED : ஆக 09, 2011 01:07 AM


Google News

சிவகங்கை : சிவகங்கையில் கூடுதலாக 3 காஸ் ஏஜன்சிகளை துவக்க வலியுறுத்தி, 10 ஆயிரம் கையெழுத்து இயக்க போராட்டம் சிவகங்கையில் நடந்தது.

அரசு ஊழியர் சங்க (ஓய்வு) மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பள்ளி, கல்லூரி ஆசிரியர் (ஓய்வு) சங்க தலைவர் முத்துச்சாமி தலைமை வகித்தனர். குணசேகரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். தே.மு.தி.க., அவை தலைவர் பாலு, அருள்ராஜ், இந்திய கம்யூ., ஒன்றிய செயலாளர் சந்திரன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சங்கரசுப்பிரமணியன், செயலாளர் ராபர்ட், மனித நேய மக்கள் கட்சி நகீப், மார்க்சிஸ்ட் நகர் செயலாளர் ஸ்டாலின் மதி, ஜனநாயக மாதர் சங்க தலைவி மணியம்மா பங்கேற்றனர். காஸ் சிலிண்டர் தட்டுப்பாடுகளை போக்க, சிவகங்கை நகர், ஒன்றியம், காளையார்கோவில் ஒன்றியத்தை மையமாக வைத்து மூன்று புதிய காஸ் ஏஜன்சிகளை துவக்க அரசு உத்தரவிடவேண்டும். இதை வலியுறுத்தி, 10 ஆயிரம் கையெழுத்து பெறும் இயக்கத்தை நடத்தினர். மாவட்ட பொருளாளர் அனந்தப்பன் நன்றி கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us