Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

ADDED : ஆக 03, 2011 02:09 AM


Google News
விழுப்புரம் : விக்கிரவாண்டி வட்டார சுகாதார துறை சார்பில் டெங்கு காய்ச்சல் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

விக்கிரவாண்டி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் துவங்கிய பேரணிக்கு வட்டார மருத்துவ அலுவலர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் பழனி வரவேற்றார். பேரணியை சுகாதாரதுறை துணை இயக்குனர் கிருஷ்ணராஜ் துவக்கி வைத்தார்.பேரணியில் பங்கேற்ற மாணவிகள் கொசு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியபடி சென்றனர். சுகாதார துறை மாவட்ட பூச்சியியல் வல்லுனர் முனுசாமி, மேற்பார்வையாளர் கலியபெருமாள், சுகாதார ஆய்வாளர்கள் ரவிக்குமார், பாலு, கதிரவன், உதயகுமார், புஷ்பராஜ், பக்கிரி, சத்தியா மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us