ADDED : செப் 18, 2011 09:40 PM
நெல்லிக்குப்பம்:'அரசின் இலவச பொருட்களை விலைக்கு வாங்குபவர்கள் சிறைக்குச்
செல்வார்கள்' என அமைச்சர் சம்பத் கூறினார்.நெல்லிக்குப்பம் அடுத்த
அண்ணாகிராமம் ஒன்றியம் எய்தனூர் ஊராட்சி அரியிருந்தமங்கலத்தில் மிக்சி,
கிரைண்டர், மின் விசிறி வழங்கும் விழா நடந்தது.
விழாவிற்கு கலெக்டர்
அமுதவல்லி, ஒன்றிய தலைவர் கவுரி, பாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
மனோகரன், தமிழரசி உட்பட பலர் பங்கேற்றனர்.ஊராட்சித் தலைவர்கள் சீத்தாராமன்,
வேணுநாதன் தலைமை தாங்கினர். தாசில்தார் அனந்தராம் வரவேற்றார்.
பயனாளிகளுக்கு மிக்சி, கிரைண்டர், மின் விசிறிகளை வழங்கி அமைச்சர் சம்பத்
பேசுகையில், 'இப்பொருட்களை விற்பனை செய்யக் கூடாது. ஒவ்வொரு பொருளுக்கும்
தனி குறியீடு உள்ளது. விலைக்கு வாங்குபவர்கள் சிறைக்கு செல்ல நேரிடும்'
என்றார்.