Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தூத்துக்குடி பைபாஸ் ரோட்டில் கடும் போக்குவரத்து நெருக்கடி

தூத்துக்குடி பைபாஸ் ரோட்டில் கடும் போக்குவரத்து நெருக்கடி

தூத்துக்குடி பைபாஸ் ரோட்டில் கடும் போக்குவரத்து நெருக்கடி

தூத்துக்குடி பைபாஸ் ரோட்டில் கடும் போக்குவரத்து நெருக்கடி

ADDED : செப் 18, 2011 01:27 AM


Google News
தூத்துக்குடி: தூத்துக்குடி பைபாஸ் ரோட்டில் புதிய மேம்பாலம் அமைக்கும் இடத்தில் சரியான போக்குவரத்து வழிமுறைகள் இல்லாமல் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தூத்துக்குடி பைபாஸ் ரோட்டில் புதிதாக மேம்பாலம் அமைக்கும் பணி 50 சதவீதம் நிறைவடைந்த நிலையில் வாகனங்கள் எந்தப்பக்கம் செல்வது என்று ஒரு வரைமுறை இல்லாமல் சென்றுவருகின்றன. தற்பொழுது தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் பாலத்தின் கீழ்பகுதி வழியாக சென்றுவிடுகின்றன. திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி வரும் வாகனங்கள் இடது பக்கம் திரும்பி பாலம் நிறைவடையும் பகுதிவரை சென்று திரும்பி வருகிறது. இதனால் போக்குவரத்து நெருக்கடி குறையும். ஆனால் வாகனங்களை நிறுத்தி அனுப்புவதற்கு போக்குவரத்து போலீசார் நியமிக்கவில்லை. மதுரையில் இருந்துவரும் லாரிகளும், திருநெல்வேலியில் இருந்து லாரி, பஸ், கார், உள்ளிட்ட வாகனங்களும் முந்திக்கொண்டு போக நினைக்கும் போது ஒன்றுக்கொன்று உரசிக்கொண்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல மணிநேரம் காத்துகிடக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடுகிறது.

பாலத்தின் அடியில் அதாவது தற்போது போக்குவரத்து போலீசார் நிற்கும் சிக்னல் அருகே டிராபிக் போலீசார் நின்று வாகனங்களை ஒன்றன் பின் ஒன்றாக செல்ல அறிவுறுத்தவேண்டும். பாலத்தின் இரண்டு பக்கமும் எந்த ஒரு வாகனங்களையும் நிறுத்துவதற்கு போலீசார் அனுமதிக்க கூடாது. அந்த பகுதியில் உடனடியாக 'நோ பார்க்கிங்' போர்டு வைத்து விதிகளை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பயணிகள், டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us