/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மருந்து நிறுவனம் மூடல்: ரூ. 1,500 கோடி நஷ்டம்மருந்து நிறுவனம் மூடல்: ரூ. 1,500 கோடி நஷ்டம்
மருந்து நிறுவனம் மூடல்: ரூ. 1,500 கோடி நஷ்டம்
மருந்து நிறுவனம் மூடல்: ரூ. 1,500 கோடி நஷ்டம்
மருந்து நிறுவனம் மூடல்: ரூ. 1,500 கோடி நஷ்டம்
ADDED : ஜூலை 21, 2011 02:27 AM
ஈரோடு: இந்தியாவில் பொதுத்துறை மருந்து நிறுவனங்கள் மூடலால், அரசுக்கு ஆண்டுக்கு, 1,500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக, தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
இந்தியா முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு, சென்னை, 'கிங் இன்ஸ்டிடியூட்', குன்னூர், 'ஃபாஸ்டர் இன்ஸ்டிடியூட்' உள்ளிட்ட பொதுத்துறை மருந்து நிறுவனங்களில் இருந்து மருந்துகள் அனுப்பப்படுகிறது. வெறிநாய்க்கடி, ரணஜன்னி, போலியோ, டி.பி., போன்ற முக்கிய நோய்களுக்கான மருந்துகள் உள்பட 356க்கும் மேற்பட்ட மருந்துகளை, இந்நிறுவனங்கள் தயாரிக்கின்றன. மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக அன்புமணி இருந்த காலத்தில், கட்டமைப்பு வசதிகள் சரியில்லை என்ற காரணத்தால், பொதுத்துறை மருந்து நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் தனியார் மருந்து நிறுவனங்கள் அதிகரிக்க துவங்கின. இந்தியாவில் அரசு மருத்துவமனைகளுக்கு இலவசமாக மருந்து வாங்கிய காலம் மாறி, அதிக பணம் கொடுத்து மருந்துகளை வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு மத்திய அரசு தள்ளப்பட்டது. இதனால் ஆண்டுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் வரை அரசுக்கு நஷ்டம் ஏற்படுவதாக, புகார் எழுந்துள்ளது. தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்க மாவட்ட தலைவர் இளங்கோ கூறியதாவது: இந்தியா முழுவதும் பொதுத்துறை மருந்து நிறுவனங்களின் மூடலால், தனியார் நிறுவனங்களிடம் மருந்துக்கு கை கட்ட வேண்டிய நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டது. மத்திய அரசு உதவியிருந்தால், பொதுத்துறை நிறுவனங்களின் கட்டமைப்பு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டிருக்கும். ஆனால், தனியார் நிறுவனங்களுக்கு லாபம் சம்பாதித்து தரும் வகையில், பொதுத்துறை நிறுவனங்களை மூடியது கண்டிக்கத்தக்கது. மருந்துகளுக்கு, 300 முதல், 1,500 ரூபாய் வரை லாபம் வைத்து, தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றன. இதனால் அரசுக்கு ஆண்டுக்கு, 1,500 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது. 356 அத்தியாவசிய மருந்துகளை, மீண்டும் கட்டுப்பாடான விலைக்கு விற்கும் பட்டியலில் அரசு அறிவிக்க வேண்டும். பொதுத்துறை மருந்து தயாரிப்பு நிறுவனங்களை திறக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


