/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/யூனியன் கவுன்சிலர் பதவிஅ.தி.மு.க.,வில்கடும் போட்டியூனியன் கவுன்சிலர் பதவிஅ.தி.மு.க.,வில்கடும் போட்டி
யூனியன் கவுன்சிலர் பதவிஅ.தி.மு.க.,வில்கடும் போட்டி
யூனியன் கவுன்சிலர் பதவிஅ.தி.மு.க.,வில்கடும் போட்டி
யூனியன் கவுன்சிலர் பதவிஅ.தி.மு.க.,வில்கடும் போட்டி
ADDED : செப் 19, 2011 01:20 AM
கோபிசெட்டிபாளையம்: கோபி யூனியன், டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கு
அ.தி.மு.க.,வில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.கோபி யூனியனில் மொத்தம் 14
வார்டுகள் உள்ளன.
சேர்மன் பதவி தி.மு.க., வசம் உள்ளது. அ.தி.மு.க., ஆளும்
கட்சியாக உள்ளதால் சேர்மன் பதவியை கைப்பற்ற அ.தி.மு.க.,வினரிடையே கடும்
போட்டி உள்ளது. கோபி யூனியனில் உள்ள 14 வார்டுகளுக்கும் அ.தி.மு.க.,
சேர்ந்த 123 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.லக்கம்பட்டி, கொளப்பலூர்,
நம்பியூர், காசிபாளையம், பெரியகொடிவேரி, ஏலத்தூர் ஆகிய கோபி
தொகுதிக்குட்பட்ட டவுன் பஞ்சாயத்துகளில் சேர்மன் பதவிக்கு, பொதுக்குழு
உறுப்பினர் காளியண்ணன், ஒன்றிய எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் வேலுமணி, ஒன்றிய
துணை செயலாளர் சண்முகம் உள்பட 139 பேரும், கவுன்சிலர் பதவிக்கு 215 பேரும்
போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளனர்.கோபி தொகுதியில் மாவட்ட பஞ்சாயத்துக்கு
நான்கு வார்டுகள் இடம்பெற்றுள்ளன. 11வது வார்டு பொது, 12வது வார்டு
எஸ்.ஸி., பெண்கள், 13வது வார்டு பெண்கள், ஐந்தாவது வார்டு பொது
பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு சிறுவலூர்
மனோகரன், முன்னாள் சேர்மன் முத்துசாமி, நிர்வாகிகள் வேலுசாமி, செல்வம்
உள்பட 20க்கும் மேற்பட்டோர் வாய்ப்பு கேட்டுள்ளனர். வி.ஐ.பி., தொகுதியான
கோபி தொகுதிக்குட்பட்ட யூனியன், டவுன் பஞ்சாயத்து தலைவர் மற்றும்
கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட அ.தி.மு.க.,வினரிடையே கடும் போட்டி
ஏற்பட்டுள்ளது.