பேஷன் ஷோ நடந்த போது ஓட்டலில் குண்டு வெடிப்பு
பேஷன் ஷோ நடந்த போது ஓட்டலில் குண்டு வெடிப்பு
பேஷன் ஷோ நடந்த போது ஓட்டலில் குண்டு வெடிப்பு
ADDED : ஜூலை 24, 2011 09:58 PM
இஸ்லமாபாத் : பாகிஸ்தானின் பைசலாபாத் நகரில் உள்ள தனியார் ஓட்டலில், நேற்று முன்தினம் பேஷன் ஷோ நடந்த போது, திடீரென குண்டு வெடித்தது.
இதனால், பேஷன் ஷோ பாதியிலேயே முடிவடைந்தது. குண்டு வெடிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன், இஸ்லாமி ஜாமியாத் தலாபா மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி மதவாத அமைப்பினர் சிலர், சேனாப் கிளப் சவுக் பகுதியில், பேஷன் ஷோவை நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 'அவ்வாறு செய்யாவிட்டால், ஓட்டலை முற்றுகையிட்டு, தாக்குதல் நடத்தப்படும்' எனவும் அவர்கள் கோஷமிட்டனர். எனினும், போலீசாரும், மாவட்ட நிர்வாகத்தினரும் பேச்சு நடத்தியதன்படி, ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
அதன்பின், குறிப்பிட்ட நேரத்தில் பேஷன் ஷோ நடந்த போது, திடீரென அந்த ஓட்டலில் குண்டு வெடித்தது. எந்த சேதமும் ஏற்படவில்லை என்றாலும், பேஷன் ஷோவில் கலந்து கொண்டோர் அனைவரும் பாதியிலேயே வெளியேறினர். இதையடுத்து, பேஷன் ஷோ குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே முடிவுக்கு வந்தது. இதனிடையே, பாகிஸ்தானின் தெற்கு வசீரிஸ்தான் பகுதியில், ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் நேற்று நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில், ஒருவர் பலியானார். ஏழு பேர் படுகாயமடைந்தனர்.