Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சமச்சீர் கல்வி தீர்ப்புக்கு ஆதரவு: பட்டாசு வெடித்தனர் வக்கீல்கள்

சமச்சீர் கல்வி தீர்ப்புக்கு ஆதரவு: பட்டாசு வெடித்தனர் வக்கீல்கள்

சமச்சீர் கல்வி தீர்ப்புக்கு ஆதரவு: பட்டாசு வெடித்தனர் வக்கீல்கள்

சமச்சீர் கல்வி தீர்ப்புக்கு ஆதரவு: பட்டாசு வெடித்தனர் வக்கீல்கள்

ADDED : ஜூலை 19, 2011 09:26 PM


Google News

கோவை : சமச்சீர் கல்வி தொடர வேண்டும் என்ற தீர்ப்புக்கு ஆதரவாக தி.மு.க.,வக்கீல்கள் நேற்று கோவையில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கினர்.சமச்சீர் கல்வி தொடர வேண்டும் என, நேற்று முன்தினம் சென்னை ஐகோர்ட் தீர்ப்பு அளித்தது.

இத்தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து, மாவட்ட தி.மு.க.,வக்கீல் அணியினர் முன்னாள் எம்.பி., சுப்பையன் தலைமையில் அரசு கலைக்கல்லூரி ரோட்டில் கூடினர். தீர்ப்புக்கு நன்றி தெரிவித்து கோஷமிட்டபடி, பட்டாசு வெடித்தனர். தொடர்ந்து, பொதுமக்களுக்கும், வக்கீல்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில், மாவட்டவக்கீல் அணி அமைப்பாளர் அருள்மொழி, செயலாளர் தண்டபாணி உட்பட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அமைப்பாளர் அருள்மொழி கூறுகையில்,'' மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது,'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us