/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பல்வேறு கட்சிப் பிரமுகர்கள் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்பல்வேறு கட்சிப் பிரமுகர்கள் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
பல்வேறு கட்சிப் பிரமுகர்கள் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
பல்வேறு கட்சிப் பிரமுகர்கள் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
பல்வேறு கட்சிப் பிரமுகர்கள் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
நெய்வேலி : மந்தாரக்குப்பத்தில் நடந்த அண்ணா துரை பிறந்த நாள் விழாவில் தி.மு.க., - தே.மு.தி.க., - காங்., கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அமைச்சர் செல்வி ராமஜெயம் முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.மந்தாரக்குப்பத்தில் அ.தி.மு.க., சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.கெங்கை கொண்டான் பேரூராட்சி செயலர் மனோகரன் தலைமை தாங்கினார்.கடலூர் மேற்கு மாவட்டச் செயலர் அருண்மொழித்தேவன், காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ., முருகுமாறன், தலைமைக் கழகப் பேச்சாளர் பாபு உட்பட பலர் பேசினர்.விழாவில் சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் முன்னிலையில் கம்மாபுரம் ஒன்றிய தி.மு.க., பிரதிநிதி அருள்ராஜ் தலைமையில் தி.மு.க., - தே.மு.தி.க., - காங்., கட்சிகளைச் சேர்ந்த 750க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க., வில் இணைந்தனர்.அதனைத் தொடர்ந்து அவர்பேசுகையில், 'முதல்வர் செய்து வரும் நலத்திட்டங்கள் ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கை முன்னேற்றத்தையும்,வாழ்க்கைத் தரத்தையும் செழிப்பாக்கி வருகிறது.இத் திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் சென்றடைய வர இருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க.,வை அதிகப்படியான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும்' என்றார்.


