/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பணம் தருகிறோம்; வெற்றியை பறிக்காதீர்கள்பணம் தருகிறோம்; வெற்றியை பறிக்காதீர்கள்
பணம் தருகிறோம்; வெற்றியை பறிக்காதீர்கள்
பணம் தருகிறோம்; வெற்றியை பறிக்காதீர்கள்
பணம் தருகிறோம்; வெற்றியை பறிக்காதீர்கள்
ADDED : செப் 19, 2011 01:06 AM
அந்தியூர்:'எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வாங்கி கொள்ளுங்கள். வேண்டியதை கேளுங்கள். எதிர்த்து போட்டியிட்டு வெற்றியை பறிக்காதீர்கள்,' எனக்கூறி, அந்தியூர் யூனியனில் உள்ள பஞ்சாயத்துக்களில் தலைவர் முதல் வார்டு உறுப்பினர் பதவியில் நிற்க விரும்புபவர் வரை பணத்தை அடித்து போட்டியாளர்களை விலைக்கு வாங்க பேரம் நடக்கிறது.நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலும், தேர்தல் கமிஷனின் கடும் விதிப்படி நடக்க வேண்டுமென, நடுநிலையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே பணம் முதல் குவாட்டர், பிரியாணி போன்றவை சப்ளையாகிறது.மேயர், நகராட்சி, டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவிக்குத்தான் இந்நிலை என்றால், அந்தியூர் யூனியனுக்கு உட்பட்ட பஞ்சாயத்து தலைவர், வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கும் பண பேரம் துவங்கி அதிர்ச்சி அளிக்கிறது. அந்தியூர் யூனியனில் கெட்டிசமுத்திரம், மைக்கேல்பாளையம், சங்கராப்பாளையம், பர்கூர், குப்பாண்டம்பாளையம் உள்ளிட்ட 14 பஞ்சாயத்துக்கள் உள்ளன.
தலைவர், வார்டு உறுப்பினர்களை மக்களும், துணைத்தலைவரை உறுப்பினர்களும் தேர்வு செய்ய உள்ளனர்.தேர்தல் தேதி அறிவிக்காத நிலையில், தேர்தலில் போட்டியிட உள்ளூர் பிரமுகர்கள் பலர் விருப்பம் தெரிவித்து, வாக்காளர்களிடம் கருத்து கேட்கின்றனர். சிலர் மக்களை சந்தித்து ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர், தனக்கு எதிராக போட்டியிட விரும்பும் நபர்களிடம் நேரடி பண பேரத்தில் இறங்கியுள்ளனர். 'தேர்தலில் போட்டியின்றி விட்டு கொடுத்தால், லட்சக்கணக்கான ரூபாய் பணம் தருகிறோம். எங்கள் வெற்றியை பாறிக்காதீர்கள். பின், தேவையானதை செய்து தருகிறேன்,' என பேரம் பேசுகின்றனர்.கட்டுப்படாத நபர்களை கவிழ்க்க, செல்வாக்குள்ள தூதுவர் குழுவை அனுப்பி 'பணிய' வைக்கும் முயற்சியும் நடக்கிறது. தலைவர் பதவி தவிர, பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கும் பண பேரம் துவங்கிவிட்டது. செல்வாக்கான நபர்களிடம், 'தேர்தல் செலவை நானே பார்த்துக் கொள்கிறேன். எனக்கும் ஓட்டை பெற்றுத்தாருங்கள்,' என உறுப்பினரிடம் தலைவர் பதவிக்கான நபர்கள் கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.'சொந்த செலவில் கோவில் கட்டி தருகிறேன். காம்பவுண்ட் சுவர் அமைக்கிறேன்,' என பல வாக்குறுதிகளையும் வீசி மக்களையும், போட்டியாளர்களையும் வளைத்து, தேர்தலுக்கு முன்பே பல லட்சங்களை அள்ளி வீசுவதால் மக்கள் ஆட்டம் கண்டுள்ளனர்.இதே நிலை பல யூனியன்களிலும் நடக்கிறது.