சொத்து குவிப்பு வழக்கு விவகாரம்: ஜெ., மனு ஆக. 8ல் விசாரணை
சொத்து குவிப்பு வழக்கு விவகாரம்: ஜெ., மனு ஆக. 8ல் விசாரணை
சொத்து குவிப்பு வழக்கு விவகாரம்: ஜெ., மனு ஆக. 8ல் விசாரணை
பெங்களூரு: தமிழக முதல்வர் ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராகாமல், வீடியோ கான்பரன்ஸ் மூலம் பதில் கொடுக்க அனுமதி கோரிய மனு, இம்மாதம் 8ம்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது.
ஜெ., வழக்கறிஞர்: 2008ல் குற்ற விசாரணை முறை சட்டத் திருத்தம், 313 (5) கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டம், 2009 ல் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டப்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராகாமல் ஸ்டேட்மென்ட் மூலம் பதிலளிக்கலாம். இது போல், பல மாநில ஐகோர்ட்டுகளில் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அரசு வழக்கறிஞர்: இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் சில வழிமுறைகளைப் பின்பற்றச் சொல்லியுள்ளது. இதில், குற்றம் சுமத்தப்பட்டவர்கள் சட்ட விதி, 313 ன் படி கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என கூறியுள்ளது. அந்த உத்தரவின்படி தான் நடக்க வேண்டும். (சுப்ரீம் கோர்ட் உத்தரவை காண்பித்தார்.)
அடுத்ததாக, வீடியோ கான்பரன்ஸ் மூலம் பதிலளிக்க அனுமதி கோரிய மனு மீது வாதிட, அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா கேட்டார். இதற்கு ஜெ., தரப்பு வழக்கறிஞர், ஸ்டேட்மென்ட் மூலம் பதில் தர வாதிட்ட, முதல் மனுவுக்கான உத்தரவு வந்த பின், வீடியோ கான்பரன்ஸ் அனுமதி மனு மீது, வாதிடுவதாகக் கூறினார். இதற்கு நீதிபதி, இரண்டு மனு மீதும் வாதம் முடிந்த பின், இரண்டு மனுவுக்கும் சேர்த்து உத்தரவு பிறப்பிக்கப்படும். வீடியோ கான்பரன்ஸ் மனு மீதான விசாரணை, ஆகஸ்ட் 8ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.