/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/குழப்பமான சூழ்நிலையில் உள்ளாட்சி தேர்தல் : எம்.எல்.ஏ.,கிருஷ்ணசாமி கருத்துகுழப்பமான சூழ்நிலையில் உள்ளாட்சி தேர்தல் : எம்.எல்.ஏ.,கிருஷ்ணசாமி கருத்து
குழப்பமான சூழ்நிலையில் உள்ளாட்சி தேர்தல் : எம்.எல்.ஏ.,கிருஷ்ணசாமி கருத்து
குழப்பமான சூழ்நிலையில் உள்ளாட்சி தேர்தல் : எம்.எல்.ஏ.,கிருஷ்ணசாமி கருத்து
குழப்பமான சூழ்நிலையில் உள்ளாட்சி தேர்தல் : எம்.எல்.ஏ.,கிருஷ்ணசாமி கருத்து
குற்றாலம் : குழப்பமான சூழ்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் எம்.எல்.ஏ.,கிருஷ்ணசாமி கூறினார்.
உள்ளாட்சி தேர்தலில் தொண்டர்களின் ஆர்வம் மிகுதியாக இருக்கிறது. தமிழக அரசு உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை கேலி கூத்தாக்கி விட்டது. தேர்தலுக்கு முன்னரே திருத்தியமைக்கப்பட்ட வாக்காளர் பட்டியல், உள்ளாட்சி அமைப்புகளில் கடைபிடிக்கப்படும் இட ஒதுக்கீடு விபரம் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரும் இதுபற்றிய செய்தி வெளியிடப்படவில்லை. இந்த ஆட்சியில் என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. குழப்பமான சூழ்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது.
அ.தி.மு.க., தி.மு.க., இரண்டு கட்சிகளுமே கூட்டணி கட்சிகளை உதாசீனப்படுத்தி விட்டன. இது ஜனநாயக நம்பிக்கை துரோகம். பெரிய கட்சிகள் சிறிய கட்சிகளை அழிக்க பார்க்கின்றன. ஆனால் பெரிய கட்சிகள்தான் அழியுமே தவிர சிறிய கட்சிகள் அல்ல. இத்தேர்தலில் ஒவ்வொரு கட்சியின் பலத்தை நிருபிக்க நல்ல வாய்ப்பு அமைந்துள்ளது. புதிய தமிழகம் வேட்பாளர்கள் இன்று (28ம் தேதி) அறிவிக்கப்படுவார்கள். அவர்கள் நாளை (29ம் தேதி) வேட்பு மனு தாக்கல் செய்வர். உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு அரசியலில் மிக பெரிய அளவிலான மாற்றம் ஏற்படும்.
தேர்தல் நேர்மையாக நடத்தப்பட வேண்டும். சாதி, மத, மொழி பாகுபாடின்றி சமூக தொண்டு செய்பவர்களை வேட்பாளர்களாக நிறுத்துவோம். ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். நேர்மையான நிர்வாகம் நடக்க வேண்டும். மணல் கொள்ளை தடுக்கப்பட வேண்டும். நில மோசடியில் ஈடுபடுவோர் தண்டிக்கப்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் நிதி அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் பல விசித்திரங்கள் ஏற்படும்.
தி.மு.க.செல்லும் வழிக்கு எதிர் வழியில்தான் எப்போதும் அ.தி.மு.க. செல்லும். ஆனால் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.செல்லும் பாதையிலேயே அ.தி.மு.க.வும் செல்கிறது'' என்றார் எம்.எல்.ஏ.,கிருஷ்ணசாமி.