/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/காயல்பட்டணம் மகளிர் கல்லூரியில் மாணவியர் பேரவை துவக்கவிழாகாயல்பட்டணம் மகளிர் கல்லூரியில் மாணவியர் பேரவை துவக்கவிழா
காயல்பட்டணம் மகளிர் கல்லூரியில் மாணவியர் பேரவை துவக்கவிழா
காயல்பட்டணம் மகளிர் கல்லூரியில் மாணவியர் பேரவை துவக்கவிழா
காயல்பட்டணம் மகளிர் கல்லூரியில் மாணவியர் பேரவை துவக்கவிழா
ADDED : ஜூலை 30, 2011 12:54 AM
காயல்பட்டணம்: காயல்பட்டண வாவு வஜ்ஹா மகளிர் கல்லூரியின் மாணவியர் பேரவை
தொடக்க விழா நடந்தது.காயல்பட்டணம் மகளிர் கல்லூரியின் மாணவியர் பேரவை
துவக்க விழா கல்லூரியின் நிறுவனர் வாவு செய்து அப்துல் ரகுமான் தலைமை
வகித்தார். கல்லூரியின் மூன்றாம்மாண்டு வணிக நிர்வாகவியர் மாணவி
ராபியாத்துல் அதவியா கிராத் ஓதினார். கல்லூரி மாணவியர் பேரவை
ஒருங்கிணைப்பாளரும் மற்றும் வணிக நிர்வாகவியல் துறைத் தலைவருமான ரஹ்மத்
ஆமினாபேகம் வரவேற்றார். வணிகவியலர் பேரவைத் தலைவி முத்துகத்ஜா, துணைத்தலைவி
பாத்திமா ரிஃப்ஹா, மாணவியர் பேரவை செயலாளர் தேவிகா, சுபாஷி ஆகியோருக்கு
பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.முதல்வர் தலைமையில் பேரவை உறுப்பினர்கள்
உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதனைத்தொடர்ந்து பேரவைத்தலைவி முத்துகதீஜா
தலைமையில் பல்வேறு மன்றங்களை சேர்ந்த மாணவியர்கள், செயலர்கள் உறுதிமொழி
எடுத்துக்கொண்டனர். கல்லூரி செயலர் வானுமொகுதஸீம் , துணை செயலாளர் வாவு
அஹீமதுஇஸ்ஹாக் மற்றும் கல்லூரி முதல்வர் மெர்ஸிஹென்றி ஆகியோர்
வாழ்த்திபேசினர்.
கல்லூரி நிர்வாக அதிகாரிஹம்ஸா முகைதீன் சிறப்பு
விருந்தினரை அறிமுகம் செய்துவைத்தார். சிறப்பு விருந்தினராக திருவிதாங்கோடு
முஸ்லீம் கலைகல்லூரியின் தமிழ்த்துறை தலைவி ஹைருன்னிஷா கலந்துகொண்டு
பேசினார். பேரவை தலைவி முத்துகதிஜா நன்றிகூறினார்.விழாவில் அனைத்துறை
விரிவுரையாளர்கள், அறக்கட்டளை உறுப்பினர்கள்,மாணவிகள்
கலந்துகொண்டனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை முதல்வர் தலைமையில் கல்லூரி
மாணவியர் பேரவை ஒருங்கிணைப்பாளரும், வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் ரஹ்மத்
ஆமினாபேகம் ஆகியோர் செய்திருந்தனர்.