/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கல்வியாண்டு நிகழ்ச்சிகளின் துவக்க விழாகல்வியாண்டு நிகழ்ச்சிகளின் துவக்க விழா
கல்வியாண்டு நிகழ்ச்சிகளின் துவக்க விழா
கல்வியாண்டு நிகழ்ச்சிகளின் துவக்க விழா
கல்வியாண்டு நிகழ்ச்சிகளின் துவக்க விழா
ADDED : ஆக 03, 2011 01:20 AM
கோவை : கோவைபுதூர் ஸ்ரீ ஜி., கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டாள் மகளிர் பேரவை சார்பில், 2011-2012ம் கல்வியாண்டு நிகழ்ச்சிகளின் துவக்க விழா நேற்று நடந்தது.
விழாவில், ஆண்டாள் பேரவை தலைவர் காயத்ரி வரவேற்றார். கல்லூரி முதல்வர் சேகர் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கோவை அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சி தயாரிப்பாளர் தாமரை சந்திரன் கலந்து கொண்டார். மகளிர் மேம்பாடு எனும் தலைப்பில் இவர் பேசியதாவது: இந்தியா ஒரு ஆணாதிக்க நாடு. பிறந்த பெண் குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்து கொல்லும் அவலம் உலகில் இங்கு தவிர எங்கும் நிகழாது. குழந்தைகளை திருடுபவர்கள் கூட ஆண் குழந்தைகளை மட்டுமே இங்கு திருடுகிறார்கள். இவ்வாறு இந்தியாவில் பெண்கள் எல்லா நிலையிலும் ஒதுக்கப்படுகிறார்கள். இத்தகைய சூழலில் தற்போது கல்லூரிகளில் படிக்கும் பெண்கள், சமூகத்தில் தங்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பை நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் வரப்போகும் பிரச்னைகளை சமமாளிக்க தங்கள் ஆளுமை திறனை வளர்த்து கொள்ள வேண்டும். திறன்களை வளர்த்து கொள்வதால் வேலைவாய்ப்பில் ஏற்படும் சவால்களை எளிதில் சமாளிக்க முடியும். மத்திய அரசு பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கினாலும்; நகர பெண்களின் வாழ்க்கை தரம் உயர்ந்தாலும்; கிராமப்புற பெண்கள் வாழ்வு மேம்பாடு அடைந்தால் மட்டுமே, நாட்டில் மகளிர் வாழ்வு மேம்பாடு அடைந்ததாக கருத்தில் கொள்ள முடியும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார். கல்லூரி ஆசிரியர்கள், மகளிர் பேரவை நிர்வாகிகள், மாணவ, மாணவியர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.