Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/காதலை மறந்தார் இன்ஜினியர்:இறுதி நிமிடத்தில் சாதித்தார் காதலி

காதலை மறந்தார் இன்ஜினியர்:இறுதி நிமிடத்தில் சாதித்தார் காதலி

காதலை மறந்தார் இன்ஜினியர்:இறுதி நிமிடத்தில் சாதித்தார் காதலி

காதலை மறந்தார் இன்ஜினியர்:இறுதி நிமிடத்தில் சாதித்தார் காதலி

ADDED : செப் 09, 2011 06:11 AM


Google News

திருநெல்வேலி:ஐந்து ஆண்டுகளாகக் காதலித்து, வேறு பெண்ணுடன் மண வாழ்க்கையை துவக்க நினைத்தார், சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர்.

மணந்தால் 'மகாதேவன்' என்ற சபதத்துடன், மாஜி காதலனை விடாப்படியாகக் கரம் பிடித்தார், காதலி.கடையநல்லூர் வலசை கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன்,27, பி.டெக்., பட்டதாரி. சென்னை 'சாப்ட்வேர்' நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவருக்கு, ஸ்ரீபெரும்புதூர் மொபைல்போன் நிறுவனத்தைச் சேர்ந்த சுசீனா மேரியுடன் காதல் ஏற்பட்டது. ஐந்து ஆண்டுகளாகப் பழகிய நிலையில், மணிகண்டன் திருமணத்திற்குப் பெண் தேடினார். இதன்படி, சென்னையைச் சேர்ந்த பெண்ணுடன், நேற்று கடையநல்லூரில் அவருக்குத் திருமணம் நடக்க இருந்தது.

இதற்கிடையே, அங்கு வந்த காதலி சுசீனா மேரி, போட்டோ ஆதாரங்களுடன் போலீசில் மணிகண்டன் மீது புகார் செய்தார். போலீசார், இருதரப்பினரிடம் பேசினர். மணப்பெண் தரப்பினர், 'அப்பாடா! தப்பித்தோம்,' என, திருமணத்தை ரத்து செய்தனர். அதே திருமண மேடையில் மணிகண்டனுக்கும், சுசீனா மேரிக்கும் திருமணம் நடந்தது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us