/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/புதிய மகளிர் குழுக்கள் உருவாக்குவதில் அரசு தொய்வுபுதிய மகளிர் குழுக்கள் உருவாக்குவதில் அரசு தொய்வு
புதிய மகளிர் குழுக்கள் உருவாக்குவதில் அரசு தொய்வு
புதிய மகளிர் குழுக்கள் உருவாக்குவதில் அரசு தொய்வு
புதிய மகளிர் குழுக்கள் உருவாக்குவதில் அரசு தொய்வு
ADDED : ஆக 05, 2011 02:04 AM
ஈரோடு: புதிய மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கும் பணி தொய்வடைந்துள்ளது.ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு, 1,794 மகளிர் உதவிக்குழுக்களுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் வீதம் மானியத்துடன் கூடிய சுழல்நிதி வழங்கப்பட உள்ளது.
184 குழுக்களுக்கு, தலா 1.25 லட்சம் ரூபாய் வீதம் மானியத்துடன் கூடிய தொழிற்கடன் வழங்க குறியீடு பெறப்பட்டுள்ளது. குழு துவங்கி ஆறு மாதம் நிறைவாகியிருந்தால் சுழல்நிதி பெறவும், ஓராண்டு நிறைவாகியிருந்தால் தொழில் கடன் பெறவும் விண்ணப்பிக்கலாம். மாவட்டத்தில் தி.மு.க., ஆட்சிக்காலத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தாலும், மகளிர் குழுவினர் நிலையான தொழிலில் ஈடுபடும் அளவுக்கு ஆக்கப்பூர்வமான திட்டங்கள் செய்படுத்தப்படவில்லை. சுழல்நிதிக்காகவும், சிறு கடன் தொகைக்காகவும் புற்றீசல் போல திடீர் குழுக்கள் தோன்றின. சிறிது காலத்தில் அவை மறைந்தன. நிலையான குழுக்களின் எண்ணிக்கை பெரியளவில் உயரவில்லை. ஈரோட்டில் 2011-12ல் கிராமப்பகுதியில் 1,267 குழுக்கள் அமைக்க குறியீடு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இதுவரை கிராமப்பகுதிகளில் 197 குழுக்கள், நகர்ப் பகுதியில் 114 குழுக்கள் என, மொத்தம் 311 குழுக்கள் மட்டுமே புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. புதிய அரசு, மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு அளிக்கவுள்ள நற்பயன்களை, தகுதியான அனைத்து மகளிரும் பெற ஏதுவாக, மாவட்டத்தில் புதிய மகளிர் குழுக்களை அமைக்க அதிகாரிகள் முனைப்பு காட்ட வேண்டும்.