திருப்பரங்குன்றம் கோயில் மண்டலாபிஷேகம் நாளை நிறைவு
திருப்பரங்குன்றம் கோயில் மண்டலாபிஷேகம் நாளை நிறைவு
திருப்பரங்குன்றம் கோயில் மண்டலாபிஷேகம் நாளை நிறைவு
ADDED : ஜூலை 21, 2011 07:46 PM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை காலை ஒன்பது மணிக்கு மண்டலாபிஷேகம் நிறைவு நிகழ்ச்சி நடக்கிறது.
கோயிலில் ஜூன் 7முதல் நடக்கும் மண்டலாபிஷேகத்தின் நிறைவை முன்னிட்டு, நேற்று மாலை யாகசாலை பூஜைகள் தொடங்கின. நாளை காலை ஏழு மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகள் முடிந்து, தங்கம், வெள்ளி குடங்கள், கலசங்கள், சங்குகளில் உள்ள புனிதநீர் மூலம் காலை ஒன்பது மணிமுதல் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சத்தியகிரீஸ்வரர், கற்பக விநாயகர், பவளக்கனிவாய் பெருமாள், கோர்வர்த்தனாம்பிகைக்கு அபிஷேகம் நடக்கும்.