/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஓட்டுப்பதிவு இயந்திரம் செயல்பாடு குறித்து ஆய்வு :ஈரோடு பள்ளியில் 2,500 இயந்திரம் இருப்புஓட்டுப்பதிவு இயந்திரம் செயல்பாடு குறித்து ஆய்வு :ஈரோடு பள்ளியில் 2,500 இயந்திரம் இருப்பு
ஓட்டுப்பதிவு இயந்திரம் செயல்பாடு குறித்து ஆய்வு :ஈரோடு பள்ளியில் 2,500 இயந்திரம் இருப்பு
ஓட்டுப்பதிவு இயந்திரம் செயல்பாடு குறித்து ஆய்வு :ஈரோடு பள்ளியில் 2,500 இயந்திரம் இருப்பு
ஓட்டுப்பதிவு இயந்திரம் செயல்பாடு குறித்து ஆய்வு :ஈரோடு பள்ளியில் 2,500 இயந்திரம் இருப்பு
ADDED : செப் 21, 2011 01:23 AM
ஈரோடு: ஈரோடு காமராஜ் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்
வைக்கப்பட்டுள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு குறித்து, நேற்று
முதற்கட்ட ஆய்வுப்பணி நடந்தது. அக்டோபர் 24ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல்
நடத்தப்பட்டு, புதிய பிரதிநிதிகள் பதவியேற்க உள்ளதால், இன்னும் ஓரிரு
நாளில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. மாநில அளவில் தேர்தல்
பணிகள் தயார் நிலையில் உள்ளன. இத்தேர்தலில் மாநகராட்சி மேயர் மற்றும்
கவுன்சிலர்கள், நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள், டவுன் பஞ்சாயத்து
தலைவர் மற்றும் கவுன்சிலர் பதவிகளுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம்
மூலம் ஓட்டுப்பதிவு நடக்கிறது. யூனியன் கவுன்சிலர், மாவட்ட பஞ்சாயத்து
கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர் மற்றும் கவுன்சிலர் பதவிக்கு ஓட்டுச்சீட்டு
மூலம் தேர்தல் நடக்க உள்ளது. அதற்கேற்ப மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம்
மற்றும் ஓட்டுச்சீட்டு அச்சடிக்கும் பணிக்கான ஏற்பாடு நடந்து வருகிறது.
ஈரோடு காமராஜ் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ள
ஈரோடு மேற்கு, கிழக்கு மற்றும் பவானி சட்டசபை தொகுதிக்கான ஓட்டுப்பதிவு
இயந்திரங்களின் செயல்பாடு குறித்து, நேற்று முதற்கட்ட ஆய்வுப்பணி நடந்தது.
அங்கு வைக்கப்பட்டுள்ள 2,500 ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், ஏற்கனவே 'சீல்'
வைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு, அவற்றில்
உள்ள அனைத்து பட்டன்களும் செயல்படுகிறதா? அதன் மூலம் பதிவு சரியாக உள்ளதா?
என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அனைத்து இயந்திரங்களும் முழு அளவில்
செயல்பட்டதால், மீண்டும் அவற்றை பாதுகாப்பாக, அறையில் வைத்து பூட்டினர்.
இப்பணிகள் அனைத்தும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டன.
இதுபோன்று, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள ஓட்டுப்பதிவு
இயந்திரங்கள், ஓரிரு நாட்களில் முழுமையாக பரிசோதிக்கப்பட்டு,
மாவட்டத்துக்கான மொத்த தேவை, கூடுதலாக 10 சதவீத இயந்திரங்கள் இருப்பில்
வைத்தல், பழுது மற்றும் சிறிய குறைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் ஒரு வார
காலத்துக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.