ADDED : ஆக 11, 2011 11:42 PM
ஈரோடு: ஈரோட்டில் 'தாய் விழுதுகள்' அமைப்பின் சார்பில், கிராமிய கலை நிகழ்ச்சி நடந்தது.
திருநங்கைகளின் பரதம், கிராமிய கலைகள், மேஜிக் நிகழ்ச்சி, யோகா நடனம், புகைப்பட கண்காட்சி ஆகியவை பார்வையாளர்களை கவர்ந்தன.
''தாய் விழுதுகள் சார்பில்,கடந்த ஆண்டு நடந்த கலை நிகழ்ச்சியின் மூலம் ஒரு லட்சம் ரூபாய் வரை நிதி திரட்டி, நலிவடைந்த மக்களுக்காக கடன் உதவி திட்டத்தை துவங்கினோம். மாவட்டத்தில் உள்ள நலிவடைந்த பெண்கள் மற்றும் திருநங்கைகள் பலரும் இதன் மூலம் பயனடைந்துள்ளனர்.'' என, ஈரோடு மாவட்ட பெண்கள் தாய் விழுதுகள் அறக்கட்டளை தலைவர் ராதா கூறினார். 'தாய்' திட்ட இயக்குநர் லட்சுமிபாய் தலைமை வகித்தார். சென்னிமலை ராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் மக்கள் ராஜன், சுசி ஈமு பார்மர்ஸ் நிர்வாக இயக்குனர் குரு, நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளி இயக்குநர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அம்பேத்கர் காதி கிராமோதயா சங்க செயலாளர் ரவிச்சந்திரன் பேசினார். ஏராளமான திருநங்கைகள், நலிவடைந்த பெண்கள் கலந்து கொண்டனர்.