கட்டடக் கலை ஆய்வாளருக்கு கவுரவ விருது
கட்டடக் கலை ஆய்வாளருக்கு கவுரவ விருது
கட்டடக் கலை ஆய்வாளருக்கு கவுரவ விருது
ADDED : ஆக 16, 2011 09:25 AM

சென்னை: தென்னிந்திய கோவில் கட்டடக் கலையில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆராய்ச்சியாளர் சித்ரா மாதவனுக்கு,ரோட்டரி கிளப் சார்பில், கவுரவ விருது வழங்கப்பட்டது.
இவ்விழாவில், ரோட்டரி கிளப்பின் தலைவர் கண்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். முன்னாள் டி.ஜி.பி., வைகுந்த் விருது பெற்றவரை அறிமுகப்படுத்தி பேசியதாவது: கட்டடக் கலை, தென்னிந்தியாவில் மிகவும் முக்கியமானக் கலை. ஸ்ரீரங்கம் கோவில், விஜயநகரம் கோவில், ஸ்ரீசைலம் கோவிலின் சிறப்புகளை ஆராய்ச்சி செய்து, அக்கோவிலின் வரலாறுகளை மக்களுக்கு தெரியப்படுத்துவதன் மூலம் அக்கால மக்களின் பண்பாடு, நாகரிகம், பழக்க வழக்கம், உணவு முறை, வாழ்க்கை முறை, பொருளாதார தொடர்புகள் போன்றவற்றை, மக்களுக்கு சித்ரா உணர்த்தி வருகிறார். தென்னிந்திய கல்வெட்டுகளை ஆராய்வதன் மூலம், நாம் இனிமேல் எப்படி இருக்க வேண்டும் என்ற அறிவு நமக்கு கிடைக்கும். இன்றைய மாறி வரும் உலக அமைப்பில், இளைய தலைமுறை, நமது கலாசாரம் சார்ந்த விஷயங்களை மறந்து வருகிறது. இவரது ஆய்வு, எதிர்கால தலைமுறைக்கு, நம் கலாசாரம் குறித்து வழிகாட்டும். பள்ளி மாணவர்கள், அந்த கால கட்டடக் கலையின் வரலாறுகளை அறிந்து கொண்டால், நம் வாழ்க்கை முறை மேம்படும். இவ்வாறு வைகுந்த் பேசினார்.
மியூசிக் அகடமியின் தலைவர் ராம், விருது வழங்கி பாராட்டிப் பேசினார். செயலர் சாஸ்திரி நன்றி கூறினார்.


