/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/கீழக்கரை ஐ.ஒ.பி., வங்கியில் அலுவலர்கள் பற்றாக்குறைகீழக்கரை ஐ.ஒ.பி., வங்கியில் அலுவலர்கள் பற்றாக்குறை
கீழக்கரை ஐ.ஒ.பி., வங்கியில் அலுவலர்கள் பற்றாக்குறை
கீழக்கரை ஐ.ஒ.பி., வங்கியில் அலுவலர்கள் பற்றாக்குறை
கீழக்கரை ஐ.ஒ.பி., வங்கியில் அலுவலர்கள் பற்றாக்குறை
ADDED : ஆக 09, 2011 01:03 AM
கீழக்கரை : கீழக்கரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஊழியர்கள் பற்றாக்குறையால் வாடிக்கையாளர்கள் நீண்ட நேரமாக காத்து கிடக்கின்றனர்.
கீழக்கரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 12 ஆயிரத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். சில மாதங்களாக வங்கியில் அலுவலர்கள் பற்றாக்குறை நீடிக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் சேவை கிடைக்கவில்லை. நீண்ட நேரமாக காத்து கிடக்க வேண்டி உள்ளது. தற்போது ரமலான் நோன்பு துவங்கியுள்ளதால் பண பரிமாற்றத்திற்கு வழக்கத்தை விட அதிகமான எண்ணிக்கையில் வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். பணியாளர்கள் பற்றாக்குறையை காரணம் காட்டி 'டிடி' வழங்கப்படுவது கிடையாது. இங்கு பணியாற்றிய மேலாளாரும், தற்போது பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் வழக்கத்தை விட மேலும் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.


