/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ரயில்வே மேம்பால பணி போக்குவரத்தில் மாற்றம்ரயில்வே மேம்பால பணி போக்குவரத்தில் மாற்றம்
ரயில்வே மேம்பால பணி போக்குவரத்தில் மாற்றம்
ரயில்வே மேம்பால பணி போக்குவரத்தில் மாற்றம்
ரயில்வே மேம்பால பணி போக்குவரத்தில் மாற்றம்
ADDED : ஜூலை 27, 2011 01:27 AM
நாமக்கல்: 'துறையூர் சாலையில், ரயில்வே மேம்பால பணிகள் நடக்க உள்ளதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது' என, மாவட்ட போலீஸ் எஸ்.பி., பிரவேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல்-துறையூர் சாலையில், ரயில்வே மேம்பால பணி, வரும் 27ம் தேதி முதல் முழுவீச்சில் நடக்க உள்ளது. எனவே, தற்போது உள்ள போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் பஸ் ஸ்டாண்டிலிருந்து துறையூர் செல்லும் வாகனங்கள், திருச்சி சாலை சென்று என்.புதுப்பட்டி நான்கு ரோட்டை அடைந்து துறையூர் செல்ல வேண்டும். சேந்தமங்கலம் செல்லும் வாகனங்களும், மேற்குறிப்பிட்ட வழியிலேயே செல்ல வேண்டும். துறையூர் மற்றும் சேந்தமங்கலத்திலிருந்து நாமக்கல் வரும் வாகனங்கள், அண்ணா நகரில் இருந்து இடதுபுறம் திரும்பி ராஜாகவுண்டர் சாலையில் சென்று, கோல்டன் பேலஸ் ஹோட்டல் பின்புறமாக வந்து எஸ்.கே. நகர் வழியாக திருச்சி ரோட்டை அடைந்து பின், பஸ் ஸ்டாண்ட் அல்லது திருச்சி செல்ல வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.