/உள்ளூர் செய்திகள்/கரூர்/குளித்தலை பஸ் ஸ்டாண்டில் பாதுகாப்புக்கு போலீஸ் தேவைகுளித்தலை பஸ் ஸ்டாண்டில் பாதுகாப்புக்கு போலீஸ் தேவை
குளித்தலை பஸ் ஸ்டாண்டில் பாதுகாப்புக்கு போலீஸ் தேவை
குளித்தலை பஸ் ஸ்டாண்டில் பாதுகாப்புக்கு போலீஸ் தேவை
குளித்தலை பஸ் ஸ்டாண்டில் பாதுகாப்புக்கு போலீஸ் தேவை
ADDED : செப் 03, 2011 12:37 AM
குளித்தலை: 'குளித்தலை பஸ் ஸ்டாண்டில் திருட்டு மற்றும் போக்குவரத்து நெரிசலை தடுக்க 24 மணி நேரமும் போலீஸார் பா துகாப்பில் ஈடுப்பட வேண்டும்' என கோரிக்கை எழுந்துள்ளது.
கரூருக்கு அடுத்தப்படியாக வளர்ந்து வரும் நகரான குளித்தலையில் பஸ் ஸ்டாண்ட் மிகவும் குறுகிய இடத்தில் செயல்பட்டு வருகிறது. 100 க்கும் மேற்பட்ட கிராம பகுதியை சேர்ந்த பொதுமக்கள், வேலை உள்ளிட் ட பல்வேறு பணிக்களுக்காக நாள்தோறும் குளித்தலை பஸ் ஸ்டாண்டு வருகின்றனர். குளித்தலை பகுதியில் அரசு மற்றும் தனியார் கல்லூரி, பள்ளிகள் இய ங்கி வருகிறது. இங்கு வரும் மா ணவர்கள் பஸ்ஸில் வந்து மற்ற பஸ்ஸூக்காக காத்திருக்கின்றனர். பஸ் ஸ்டாண்டில் போதிய போலீஸ் பாதுகாப்பு இ ல்லாததால் அடிக்கடி வழிப்பறி, பிக்பாக்கெட் போன்ற திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. பஸ் ஸ்டாண்ட் அருகில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால், பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் குறித்த நேரத்தில் செல்ல முடியவில்லை. எனவே, குளித்தலை பஸ் ஸ்டாண்டில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் போலீஸாரை பணி அமர்த்த வேண்டியது அவசியம்.