/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/சின்னாளபட்டியில் சுகாதாரம் கேள்விக்குறிசின்னாளபட்டியில் சுகாதாரம் கேள்விக்குறி
சின்னாளபட்டியில் சுகாதாரம் கேள்விக்குறி
சின்னாளபட்டியில் சுகாதாரம் கேள்விக்குறி
சின்னாளபட்டியில் சுகாதாரம் கேள்விக்குறி
ADDED : ஜூலை 23, 2011 01:01 AM
சின்னாளபட்டி : சின்னாளபட்டியில் இறைச்சி கழிவுகளால் ஏற்படும் சுகாதாரகேட்டை போக்க, பேரூராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சின்னாளபட்டியில் உள்ள ஆடு அறுக்கும் கூடம் பெயரளவில் இயங்கி வருகிறது.
சுகாதாரமற்ற இடங்களில் ஆடு, கோழி இறைச்சி கடைகள் உள்ளன. இதன் கழிவுகளை அங்கிருந்து அப்புறப்படுத்துவதில்லை. துப்புரவு பணியாளர்களும் இவற்றை சுத்தம் செய்வதில்லை. பல நாட்கள் தேங்கிக்கிடக்கும் கழிவுகளால் துர்நாற்றம் ஏற்படுகிறது.
பஸ் ஸ்டாண்ட், உழவர் சந்தை அருகிலேயே இந்த அவல நிலை உள் ளது. கழிவுகளை நாய், பறவைகள் எடுத்து சென்று மற்ற இடங்களில் இறைத்து விடுகின்றன. இதனால் அனைத்து பகுதிகளிலும் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது.
இங்கு ஆட்டு இறைச்சிக்கு சுகாதார ஆய்வாளர் முத்திரையிடும் நடைமுறை கைவிடப்பட்டுள்ளது. ஆடு அறுவை கூடத்தில் மட்டுமே இறைச்சிக்காக ஆடுகள் அறுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதில்லை. நோயால் இறந்த ஆடுகள் குளிர் பெட்டிகளில் பாதுகாக்கப்பட்டு, பின் அறுக்கப்படுகின்றன.
இறைச்சி ஆடுகள் அறுக்கப்படுவதை முறைப்படுத்த வேண்டும். சுகாதார ஆய்வாளர் இறைச்சியில் முத்திரையிடும் நடைமுறையை அமலாக்க வேண்டும். கண்ட இடங்களிலும் இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடை செய்ய பேரூராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.