Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/வாகனங்கள் நிறுத்த வசதியின்றி திருத்தணி மலைக் கோவிலில் அவதி

வாகனங்கள் நிறுத்த வசதியின்றி திருத்தணி மலைக் கோவிலில் அவதி

வாகனங்கள் நிறுத்த வசதியின்றி திருத்தணி மலைக் கோவிலில் அவதி

வாகனங்கள் நிறுத்த வசதியின்றி திருத்தணி மலைக் கோவிலில் அவதி

ADDED : செப் 22, 2011 12:33 AM


Google News

திருத்தணி : திருத்தணி முருகன் மலைக்கோவிலில், பக்தர்கள் வரும் வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடவசதியில்லாததால், போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு, தினசரி தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பெரும்பாலான பக்தர்கள் கார், வேன், பஸ், லாரி மற்றும் இரு சக்கர வாகனங்களில் வந்து முருகப் பெருமானை தரிசித்து செல்கின்றனர். மலைக்கோவில் வளாகத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடம் மிக குறுகிய அளவில் உள்ளது. தற்போது அங்கு 15 வாகனங்கள் (கார், வேன்) தான் நிறுத்த முடியும். தினசரி குறைந்தபட்சம் 150க்கும் மேற்பட்ட வாகனங்கள் மலைக் கோவிலுக்கு வந்து செல்கின்றன. அதே போல் 50 பைக்குகள் நிறுத்துவதற்கு இடம் உள்ளது.



மலைக்கோவிலில் வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடவசதியில்லாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகனங்கள் மலைக்கோவிலுக்கு செல்லும் சாலையில் (காட் ரோட்டில்) அப்படியே வண்டிகளை நிறுத்திவிட்டு, பக்தர்கள் கோவிலுக்கு செல்கின்றனர். இதனால் நடந்து வரும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.



இது குறித்து கோவில் அலுவலர் ஒருவர் கூறியதாவது: ''முருகன் கோவிலில் 25 கோடி ரூபாயில் தங்க விமானம், கோவில் கும்பாபிஷேகம் உட்பட பல்வேறு திருப்பணிகள் நடந்துள்ளதால் மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் வாகனங்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு, போதிய இடமின்றி சிரமப்படுவதால் நிர்வாகம் வாகனங்கள் நிறுத்துவதற்கு மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் மண் பரிசோதனையும் நடத்தியுள்ளோம். விரைவில் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏதுவாக அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.'' இவ்வாறு அவர் கூறினார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us