/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மின் சிக்கனம் நாட்டையும், வீட்டையும் காக்கும் :கோவை மண்டல தலைமை பொறியாளர் பேச்சுமின் சிக்கனம் நாட்டையும், வீட்டையும் காக்கும் :கோவை மண்டல தலைமை பொறியாளர் பேச்சு
மின் சிக்கனம் நாட்டையும், வீட்டையும் காக்கும் :கோவை மண்டல தலைமை பொறியாளர் பேச்சு
மின் சிக்கனம் நாட்டையும், வீட்டையும் காக்கும் :கோவை மண்டல தலைமை பொறியாளர் பேச்சு
மின் சிக்கனம் நாட்டையும், வீட்டையும் காக்கும் :கோவை மண்டல தலைமை பொறியாளர் பேச்சு
ADDED : ஆக 03, 2011 10:36 PM
பல்லடம் : ''மின் சிக்கனம் நாட்டையும், வீட்டையும் காக்கும்,'' என கோவை மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் தங்கவேல் பேசினார்.மின் இணைப்புகளுக்கான பெயர் மாற்றம் சிறப்பு முகாம், பல்லடம் மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் நடந்தது.
திருப்பூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நிர்மலதா, பல்லடம் டிவிசன் செயற்பொறியாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். பல்லடம் நகர உதவி செயற்பொறியாளர் சத்யநாராயணன் வரவேற்றார்.கோவை மண்டல மின்வாரிய முதன்மை பொறியாளர் தங்கவேல் பேசியதாவது:புவி தொடர்ந்து வெப்பமயமாகி வருகிறது. வெப்பமயத்தை தடுக்க அனைவரும் மரக்கன்றுகள் நட வேண்டும். வெப்பமயத்தை தடுக்க, முகாமில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் மரக்கன்று வழங்கப்படும். அனைவரும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மின் சிக்கனம் நாட்டுக்கும், வீட்டுக்கும் நன்மை தரும். சாதாரண குமிழ் விளக்குகளுக்கு பதிலாக குழல் விளக்குகளை உபயோகிக்க வேண்டும். ஐ.எஸ்.ஐ., முத்திரையிடப்பட்ட மற்றும் நட்சத்திர குறியிட்ட மின் சாதனங்களையே உபயோகிக்க வேண்டும்.கிரைண்டர்களில் நைலான் பெல்ட்டுகளை களையே எப்போதும்உபயோகிக்க வேண்டும். குளிர்சாதன பெட்டியை அடிக்கடி திறந்து மூடக் கூடாது. கம்ப்யூட்டர் பயன்பாடு முடிந்ததும் உடனடியாக 'சுவிட்ச் ஆப்' செய்ய வேண்டும். தேவைப்படும்போது மீண்டும் 'ஆன்' செய்து கொள்ளலாம். வாசிங் மெஷின்களை எப்போதும் முழுத்திறனுக்கே உபயோகிக்க வேண்டும். இந்நடவடிக்கைகள் மூலம் மின் சிக்கனம் ஏற்படும். மெயின் சுவிட்ச் பலகையில் இருந்து அவசியம் 'எர்த்' கம்பியை, ஜி. ஐ., பைப்புடன் தரையுடன் இணைக்க வேண்டும். மின் கம்பங்கள் மற்றும் 'ஸ்டே' கம்பிகளை தொடாமல் இருக்க வேண்டும், என்றார்.பல்லடம், வடுகபாளையம், நாரணாபுரம், சாலைப்புதூர், ஜல்லிப்பட்டி, பாப்பம்பட்டி, செலக்கரச்சல், கரடிவாவி, கே.என்.புரம், பொங்கலூர், சக்தி நகர் மற்றும் கொடுவாய் பகுதிகளில் உள்ள மின்நுகர்வோர்பங்கேற்றனர். 150 விண்ணப்பதாரர்களுக்கு முகாமில் உடனடியாக பெயர் மாற்றம் செய்து அதற்குரிய ஆவணங்கள் வழங்கப்பட்டன. உரிய ஆவணங்கள் இல்லாத 20 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. 30 விண்ணப்பங்கள் பரிசீலினைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.