/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/வேணுகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி நாளை துவக்கம்வேணுகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி நாளை துவக்கம்
வேணுகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி நாளை துவக்கம்
வேணுகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி நாளை துவக்கம்
வேணுகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி நாளை துவக்கம்
ADDED : ஆக 21, 2011 01:47 AM
கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி அடுத்த, கவரைப்பேட்டை ராதா ருக்மணி உடனுறை வேணுகோபால சுவாமி கோவிலில் 6ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை (22-8-2011) துவங்குகிறது.தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், தினசரி மாலை 6 மணிக்கு வண்ண மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் உற்சவர் அலங்கரிக்கப்பட்டு, ரயில் நிலைய சாலையில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.கடைசி நாளான 31ம் தேதி புதன்கிழமை இரவு 10 மணிக்கு வாண வேடிக்கையுடன் உற்சவர் திருவீதியுலா நடை பெறும்.
விழா ஏற்பாடுகளை வேணுகோபால சுவாமி கோவில் பக்த ஜன சபையினர் செய்து வருகின்றனர்


