/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/மாத்தூர் தொட்டிபாலத்தில் கும்பல் அட்டூழியம்மாத்தூர் தொட்டிபாலத்தில் கும்பல் அட்டூழியம்
மாத்தூர் தொட்டிபாலத்தில் கும்பல் அட்டூழியம்
மாத்தூர் தொட்டிபாலத்தில் கும்பல் அட்டூழியம்
மாத்தூர் தொட்டிபாலத்தில் கும்பல் அட்டூழியம்
ADDED : அக் 05, 2011 12:15 AM
திருவட்டார் : மாத்தூர் தொட்டிப்பாலத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் தாக்கப்பட்டுள்ளனர்.கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலங்களில் மாத்தூர் தொட்டிப்பாலமும் ஒன்று.
இங்கு சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். ஆனால் இப்பகுதியில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லை. குடிபோதையில் அட்டகாசம், ரவுடீசம், திருட்டு, வழிப்பறி போன்றவை அவ்வப்போது அரங்கேறுகிறது. இங்கு சுற்றுலா வரும் பெண்களை ஈவ்டீசிங் செய்வதும் அடிக்கடி நடக்கிறது. இந்நிலையில் நாகை மாவட்டம் நீலக்கல் பகுதியை சேர்ந்த சிலர் குமரி மாவட்டத்திற்கு சுற்றுலா வந்தனர். கன்னியாகுமரியில் பல இடங்களுக்கு சென்று விட்டு கடந்த ஞாயிறு காலை திற்பரப்பு அருவிக்கு சென்றனர்.அங்கிருந்து குலசேகரம் ஜங்ஷன் வந்தனர். பின் மாத்தூர் தொட்டிப்பாலத்திற்கு மினி பஸ்சில் சென்றனர். அப்போது பஸ்சில் இருந்த வாலிபர்கள் சிலர் சுற்றுலா வந்த பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். மினிபஸ் மாத்தூர் தொட்டிப்பாலத்தின் அருகில் வந்ததும் சுற்றுலா பயணிகள் இறங்கினர். இவர்களை பின் தொடர்ந்து அந்த வாலிபர்களும் இறங்கி, சுற்றுலா வந்த பெண்களிடம் மீண்டும் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட வாலிபரை அந்த கும்பல் அருகில் உள்ள பள்ளத்தில் தள்ளிவிட்டது. இந்நிலையில் மீண்டும் சில்மிஷ வாலிபர்கள் மற்றும் சிலர் கும்பலாக ஒன்று சேர்ந்து வெளியூர் சுற்றுலா பயணிகளை தாக்கினர்.இதில் வெளிமாவட்டத்தை சேர்ந்த 22 வயது வாலிபருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு கால் முறிந்தது. இத்தாக்குதல் குறித்து திருவட்டார் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வழக்கம் போல் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரித்தனர். ஆசியாவில் உயரமான பாலம் என கருதப்படும் மாத்தூர் தொட்டிப்பாலம் பகுதியில் போதிய பாதுகாப்பு வசதி இல்லாததும், பட்டப்பகலில் சுற்றுலா பயணிகளை கும்பல் தாக்கிய சம்பவமும் சுற்றுலா பயணிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.


