/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வங்கிகளில் ரகசிய கண்காணிப்பு கேமிரா வைக்க வலியுறுத்தல்வங்கிகளில் ரகசிய கண்காணிப்பு கேமிரா வைக்க வலியுறுத்தல்
வங்கிகளில் ரகசிய கண்காணிப்பு கேமிரா வைக்க வலியுறுத்தல்
வங்கிகளில் ரகசிய கண்காணிப்பு கேமிரா வைக்க வலியுறுத்தல்
வங்கிகளில் ரகசிய கண்காணிப்பு கேமிரா வைக்க வலியுறுத்தல்
ADDED : செப் 25, 2011 10:08 PM
பொள்ளாச்சி : 'வங்கிகளில், கொள்ளை சம்பவத் தை தவிர்க்க ரகசிய கண்காணிப்பு கேமிரா வைக்க வேண்டும்' என, வங்கியாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் டி.எஸ்.பி., வலியுறுத்தினார்.
பொள்ளாச்சி டி.எஸ்.பி., அலுவலகத்தில், 'வங்கியில், கொள்ளை போவதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்' குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்மாத்துரை, மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதி வங்கி மேலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் பொள்ளாச்சி போலீஸ் டி.எஸ்.பி., பாலாஜி பேசியதாவது:திருப்பூரில் நகைகள் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இதுபோன்ற சம்பவம் நிகழாமல் தவிர்க்க வங்கிகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வங்கியில் பாதுகாப்புகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும். வங்கிக்கு அருகிலோ, வங்கியிலோ சந்தேகப்படும் வகையில் யாரேனும் இருந்தால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். குறிப்பாக, வங்கி நுழைவாயில், நகை, பணம் வைக்கும் பெட்டகம் உள்ள அறைகளில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த வேண்டும். பெட்டக அறையில், ரகசிய கண்காணிப்பு கேமிரா இருக்க வேண்டும். தற்போது, பல நவீன தொழில்நுட்பங்கள் வந்துள்ளதால், எந்த பகுதியிலிருந்தும் கண்காணிப்பு கேமிராவில் பதிவான தகவல்களை பார்த்து கொள்ளலாம்.வங்கியிலுள்ள, 'ஷெட்டர்களுக்கு' நடுவில் பூமிக்குள் புதையும் வகையில் 'லாக்' இருக்க வேண்டும். பல வங்கிகளின் கதவுகளில் உள்ள 'தாழ்பாழ்' உறுதியாக இல்லாததால், திருடர்கள் எளிதாக திறந்து விடுகின்றனர். வங்கி, பெட்டக அறை, ஏ.டி.எம்., மையங்களில், பகல், இரவு நேரங்களில் கண்காணிப்புக்காக 'வாட்ச் மேன்' நியமிக்க வேண்டும். பலரும் வயதானவர்களை நியமிப்பதால், கொள்ளை சம்பவம் நடக்கும் போது கையாள வேண்டிய உக்திகள் தெரியாமல் போகிறது.துடிப்பான இளைஞர்களை ரோந்து பணியில் ஈடுபடுத்துவது, கொள்ளை சம்பவம் நடக்கும் போது மேற்கொள்ள வேண்டிய தகவல்களை கற்று தர வேண்டும். வங்கி உயர் அதிகாரிகள் எண்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். கொள்ளை சம்பவத்தை தடுக்கும் வகையில், அபாய எச்சரிக்கை மணி, பெட்டகத்திற்கு 'நம்பர் லாக்', இரண்டு சாவி ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும். வங்கிகள் விழிப்புணர்வுடன் இருந்தால், கொள்ளை சம்பவத்தை தவிர்க்க முடியும்.இவ்வாறு, டி.எஸ்.பி., பாலாஜி பேசினார்.